

மும்பை
ரிசர்வ் வங்கியின் அவசர திருத்த நடவடிக்கைக்கு லக்ஷ்மி விலாஸ் வங்கி உள்ளாகியிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுவரும் வழக்கமான சேவை களில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று வங்கித் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குநர்கள் மீது மோசடி, சதி திட்டம், முறைகேடு ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு, அதிக வாராக் கடன் மற்றும் நிதி மூலதன பற்றாக்குறை போன்ற காரணங்களினால் லக்ஷ்மி விலாஸ் வங்கியை, பிசிஏ என்ற ‘அவசர திருத்த நடவடிக்கை’க்கு ரிசர்வ் வங்கி உட்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வாடிக்கை யாளர்களின் வங்கிச் சேவைகளில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. டெபாசிட்தாரர்கள் வழக்கம்போல தங்களின் சேவைகளைப் பெற லாம். நிறுவனக் கடன், அதிக ரிஸ்க் உள்ள கடன் ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் இருக்கும். மற்றபடி கடன் வழங்குவதும் கூட எப்போதும் போல செயல் படுத்தப்படும் என்று வங்கித் தரப்பு தெரிவித்துள்ளது.