Published : 30 Sep 2019 09:24 AM
Last Updated : 30 Sep 2019 09:24 AM

பிபிசிஎல் நிறுவனத்தை தனியார்மயமாக்க அரசு திட்டம்

புதுடெல்லி

இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன மான பாரத் பெட்ரோலியம் கார்ப் பரேஷன் லிமிட்டெட்டை(பிபிசிஎல்) தனியார்மயமாக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற அவைகளின் ஒப்புதலைப் பெற முயற்சி மேற்கொண்டுவருகிறது.

உள்நாட்டு எண்ணெய் சுத்தி கரிப்பு மற்றும் விற்பனை துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் பங் களிப்பை அனுமதிக்கவும், அதன் மூலம் போட்டியை அதிகப்படுத்தி துறையின் வளர்ச்சியை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பங்கு விலக்கல் மூலம் நிதித் திரட்டு நடவடிக்கையில் ரூ.1.05 லட்சம் கோடியைத் திரட்டவும் முயற்சித்துவருகிறது.

எனவே பிபிசிஎல் நிறுவனத்தின் 53.3 சதவீத பங்குகளை பன்னாட்டு தனியா நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, நாடாளுமன்ற அவை களின் ஒப்புதலைக் கட்டாயம் பெற வேண்டும். ஏனெனில், 2003-ல் உச்சநீதிமன்றம் ஹெபிசிஎல், பிபிசிஎல் ஆகிய நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்த நாடா ளுமன்ற அவைகளின் ஒப்பு தலைப் பெற வேண்டும் என உத்தர விட்டுள்ளது.

தற்போது பிபிசிஎல் பங்கு களை வாங்குவதில் பல்வேறு நிறு வனங்கள் போட்டிப் போடுவதாக வும், குறிப்பாக சவுதி அராம்கோ நிறுவனம் முதலீடு செய்யத் தயா ராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

செப்டம்பர் 27-ம் தேதி நிலவரப்படி பிபிசிஎல் சந்தை மதிப்பு ரூ.1.02 லட்சம் கோடி. இதன் 2 சதவீத பங்குகளை வாங்கினால் கூட அரசுக்கு ரூ.26,500 கோடி நிதி கிடைக்கும்.

பிபிசிஎல் மும்பை, கொச்சி, பினா, நுமாலிகார் ஆகிய நான்கு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங் களைக் கொண்டுள்ளது. இவற்றின் மொத்த திறன் 38.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை எரிபொருளாக மாற்றவல்லவை. பிபிசிஎல் நிறுவனத்துக்கு 15,078 பெட்ரோல் நிலையங்களும், 6,004 எல்பிஜி விநியோகஸ்தர்களும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x