இந்தியா மீது சந்தேகமிருந்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்: பிரிட்டிஷ் முதலீட்டாளர்களுக்கு ராகேஷ் பதிலடி

இந்தியா மீது சந்தேகமிருந்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்: பிரிட்டிஷ் முதலீட்டாளர்களுக்கு ராகேஷ் பதிலடி
Updated on
1 min read

மும்பை

இந்தியாவில் தற்போது நிலவி வரும் வேலையின்மை குறித்து கேள்வி எழுப்பிய பிரிட்டிஷ் முத லீட்டாளருக்கு, ‘தேவையென்றால் பாகிஸ்தானுக்கு சென்று முதலீடு செய்யுங்கள்’ என்று இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பதில் கூறினார்.

‘இந்து பொருளாதார மன்றம்’ சார்பாக நேற்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் ஆபத்தான அளவில் சரிந்து வரு கிறது. முதல் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

வேலையின்மை கடுமையான அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து உள்ளது.

இதுதொடர்பான தகவலை வெளியிடாமல் மத்திய அரசு மறைத்துவருவதாக குற்றம்சாட் டப்பட்டு வந்த நிலை யில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரிட்டிஷ் முதலீட்டாளர் ஒருவர்,

இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை தொடர்பாக சில கேள்விகளை கேட்டார். அதற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கூறிய தாவது, “இந்தியாவின் சந்தை குறித்தும், வேலை வாய்ப்பு குறித் தும் உங்களுக்குச் சந்தேக மிருந்தால், பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு முதலீடு செய்யுங் கள். சந்தேகத்துடன் நீங்கள் செய்யும் முதலீடு இந்தியாவுக்குத் தேவையில்லை” என்று காட்ட மாகப் பதில் அளித்தார்.

பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சி

கடந்த ஆண்டுகளில் வேலை யின்மை அதிகரித்த நிலையிலும், இந்தியப் பொருளாதாரமும், பங்குச் சந்தை முதலீடுகளும் நல்ல வளர்ச்சியையே கண்டிருக் கின்றன என்றும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in