Published : 10 Jul 2015 10:06 AM
Last Updated : 10 Jul 2015 10:06 AM

இவரைத் தெரியுமா?- சஞ்சீவ் ஷா

கோல்டுமேன் சாக்ஸ் அசெட் மேனேஜ்மெண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. ஆகஸ்ட் 2011 லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

வணிகவியலில் இளநிலை பட்டமும், லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் கல்வி மையத்தில் கணக்குப் பதிவியல் மற்றும் நிதியியலில் உயர்கல்வியும் பெற்றவர்.

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பெஞ்ச்மார்க் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர். மேலும் பெஞ்ச்மார்க் பரஸ்பர நிதியத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கிறார்.

டிஎஸ்பி மெரில் லின்ச் நிறுவனத்தில் முதன்மை துணைத் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

நிதியியல் சந்தையில் 24 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர்.

எக்ஸ்சேஞ்ச் டிரேடர்ஸ் பண்ட் மற்றும் கோல்டு இடிஎப் பண்டை இந்தியாவில் முதன் முதலில் தொடங்கியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x