

மும்பை
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களால் முற்றுகை யிடப்பட்ட பஞ்சாப் மற்றும் மகா ராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப் புக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
கடந்த திங்கள் கிழமையன்று ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை பிறப் பித்தது. அதில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1,000 மட் டுமே எடுக்க அனுமதிக்கப்படுவர் எனவும், புதிய கடன் வழங்குவது, புதிய டெபாசிட்களை ஏற்பது போன்ற நடவடிக்கைகளுக்கு 6 மாதம் தடை விதிப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இதனால் அனைத்து பிஎம்சி வங்கிக் கிளைகளிலும் வாடிக்கை யாளர்கள் பெருமளவில் குவிந்த னர். தங்களது சேமிப்புத் தொகை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பலர் அலை பாய்ந்தனர். முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அனைத்து கிளை களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் பெரு மளவிலான மோதல் தவிர்க்கப் பட்டது. இந்நிலையில் வாடிக்கை யாளர்கள் ரூ.10 ஆயிரம் வரை தங்கள் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வாடிக் கையாளர்கள் மத்தியில் ஓரளவு நிம்மதியை அளிப்பதாக அமைந்துள்ளது.
பிஎம்சி வங்கியில் சிறிய வர்த்த கர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்துள்ளனர்.
பிஎம்சி வங்கி, கடன் வழங்கிய தில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல் பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ஆர்பிஐ தடை விதித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கிக்கு கடன் செலுத்த வேண்டியிருந்தால் அதற்கேற்பவே சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனு மதிக்கப்படுவர் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.10 ஆயிரம் வரை எடுப்பதற்கு அனு மதித்துள்ளதால் 60 சதவீதம் பேர் தங்களது முழு சேமிப்பையும் எடுக்க வழி ஏற்பட்டுள்ளது.