Published : 24 Sep 2019 09:56 am

Updated : 24 Sep 2019 10:02 am

 

Published : 24 Sep 2019 09:56 AM
Last Updated : 24 Sep 2019 10:02 AM

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்தி மையம்: முதலீட்டாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்

apple-in-india

புதுடெல்லி

ஆப்பிள் நிறுவனம் சில உற் பத்தி மையங்களை இந்தியா வில் அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்த முயற்சி உலக முதலீட்டாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.


நாட்டின் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், பணப்புழக்க மும், முதலீடுகளும் வெகுவா கக் குறைந்துவிட்டன. இது பெரும் கவலைக்குரிய விஷய மாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு தொழில் நிறு வனங்களுக்கு மிகப்பெரிய சலுகையாக நிறுவன வரி குறைப்பு நடவடிக்கையை எடுத் தது. மேலும் புதிதாகத் தொடங் கப்படும் உற்பத்தி நிறுவனங் களுக்கும், ஸ்டார்ட் அப் நிறு வனங்களுக்கும் 15 சதவீதமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் நிறுவனங்கள் பலவும் மகிழ்ச்சியடைந்துள்ளன.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய எலெக்ட் ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது உற்பத்தி மையங்கள் சிலவற்றை இந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: “அரசு சரியான ரிஸ்க்கை எடுத்துள்ளதாகவே கருதுகிறேன். அதன் பலனும் தெரிய ஆரம்பித்துள்ளது.

15 சதவீத வரி

ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி மையங்களை இந்தியா வில் அமைக்க முடிவு செய் திருப்பது, உலக முதலீட்டாளர் கள் அனைவருக்கும் ஒரு சமிக்ஞையை அனுப்புவதாகப் பார்க்கிறேன். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை முதலீட்டாளர் களுக்கு முன்னுதாரணமாக அமையும். ஏனெனில் எந்த தெற்கு ஆசிய நாடுகளிலும் உற்பத்தி நிறுவனத்துக்கு 15 சதவீத வரி இல்லை என்றார்.

மேலும், இனி வரும் எந்த அரசும் நிறுவன வரியை உயர்த் துவது கடினம்தான். அப்படி உயர்த்த நினைத்தால் நாடாளு மன்றத்துக்கு எடுத்துச் சென்று ஒப்புதல் வாங்க வேண்டும். எதற்காக வரி விகிதம் மாற்றப் படுகிறது என்பதையும் விளக்க வேண்டும். எனவே அவ்வளவு எளிதில் முடிவெடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



ஆப்பிள் நிறுவனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author