ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு

ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (திங்கள்கிழமை) காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலை வர்த்தக துவக்கத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1331 புள்ளிகள் உயர்ந்து 39,346.01 என்ற அளவில் இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 392 புள்ளிகள் அதிகரித்து 11,666 என்ற புள்ளியில் வர்த்தகமானது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல் துறை மந்தநிலை, உலோகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை கடந்த சில காலமாகவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.27) உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிச் சலுகை அறிவித்ததையடுத்து, பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டது. இதனால் பங்குகள் வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியது. வெள்ளிகிழமை சந்தை ஏற்றத்துடன் முடிந்த நிலையில் இன்று காலை வர்த்தகமும் ஏற்றத்துடனேயே தொடங்கியுள்ளது.

ஐடி துறை, மருந்துத் துறை, வங்கி, ஆட்டோமொபைல் துறைகளின் பங்குகளில் ஏற்றம் கண்டுள்ளன. ஐடிசி, லார்சன் அண்ட் டூர்போ, இண்டஸ் இண்ட் பேங், பிரிட்டானியா, ஐசிஐசிஐ, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் விற்பனை முதல் 50 இடத்தில் உள்ளன.

-ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in