Published : 22 Sep 2019 09:57 AM
Last Updated : 22 Sep 2019 09:57 AM

வாகனங்களுக்கான ஜிஎஸ்டியில் மாற்றமில்லை; வாகன விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் வேறு வழிகளை காண வேண்டும்: சியாம் தலைவர் ராஜன் வதேரா கருத்து

புதுடெல்லி

ஜிஎஸ்டி கவுன்ஸில் கூட்டத்தில் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியில் எந்த குறைப்பும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வாகனத் தயாரிப்பு நிறு வனங்கள் தற்போதைய தேக்க நிலையை எதிர்கொள்ள வேறு வழி களைக் கண்டறிய வேண்டும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் (சியாம்) தலைவர் ராஜன் வதேரா தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளி அன்று கோவாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன் ஸில் கூட்டம் நடைபெற்றது. அதில் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத மாக குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், வாகன துறை யினர் எதிர்பார்த்தபடி வாகனங்களுக் கான ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை. இந்நிலையில் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவை வாகன தயாரிப்பு நிறுவனங்கள்தான் தீர்க்க வேண்டும். அதற்கான வழிகளை அவை கண் டறிய வேண்டும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் வதேரா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘10 முதல் 13 இருக் கைகளைக் கொண்டிருக்கும் வாகனங் களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு வரியை குறைக்க வேண்டும் என்று நீண்டகால மாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமீபத்திய பொருளாதார நடவடிக்கைகள் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சியை ஊக்குவிக்கும். பொருளாதார நிலை சீரானதும் வாக னங்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சமீப காலமாக வாகனத் துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. வாக னங்களின் விற்பனை மோசமான அளவில் சரிந்து உள்ளது. பல நிறு வனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணி யாளர்கள் வேலை இழந்துள்ளனர். வாகனங்களின் மீதான ஜிஎஸ்டி இந்த தேக்க நிலைக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. தற்போதைய நெருக்கடி நிலை சரி செய்யப்பட வேண்டும் என் றால், ஜிஎஸ்டி குறைக்கப்பட வேண்டும் என்று வாகன தயாரிப்பு துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந் நிலையில், நேற்று முன்தினம் நடை பெற்ற ஜிஎஸ்டி கவுன்ஸில் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், அந்தக் கூட்டத்தில் வாகன ஜிஎஸ்டியில் எந்த குறைப்பும் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாக தங்கும் விடுதிகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x