

மும்பை
பூஷண் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் வழங்கும்போது அதன் திரும்பச் செலுத் தும் தகுதியை மதிப்பீடு செய்யாமல் கடன் வழங்கியதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்கும் அமைப்பான எஸ்ஐஎஃப்ஓ நடத்திய விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை டெல்லி நீதிமன்றத்தில் எஸ்ஐஎஃப்ஓ தாக்கல் செய்துள்ளது.
கடன் சுமையில் சிக்கித் தவித்த நிலையில் பூஷண் ஸ்டீல் நிறுவனத்தின் கடனை திரும்பச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்வதில் இரு வங்கிகளும் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட தாகவும், உரிய வகையில் மதிப்பீடு செய்யாததே கடன் திரும்பாததற்குக் காரணம் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
எஸ்ஐஎஃப்ஓ அறிக்கையின் நகல் ஒன்று ரிசர்வ் வங்கி மற்றும் நிதி சேவைதுறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பூஷண் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலையை தணிக்கை செய்ய டெலாய்ட் ஹஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் (டிஹெச்எஸ்) நிறுவனத்தை எஸ்பிஐ நியமித்திருந்தது.
2016-ம் ஆண்டு மே மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பூஷண் ஸ்டீல் நிறுவன நிதி நிலவரத்தை தணிக்கை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. ஏற்கெனவே டெலாய்ட் நிறுவனம் தணிக்கை செய்து வந்ததை எஸ்பிஐ திருத்தம் செய்துள்ளது.
தணிக்கை நடவடிக்கைக்கு பூஷண் ஸ்டீல் நிர்வாகம் சரிவர ஒத்துழைப்பு தர வில்லை என்று டெலாய்ட் நிறுவனம் தெரிவித்த போதிலும், இந்தப் பிரச் சினைக்கு உரிய தீர்வு காண இரு வங்கிகளும் தவறி விட்டன என்று எஸ்ஐ எஃப்ஓ சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் நிதியை தணிக்கை செய்த குரோல் நிறுவனம், நீண்டகால மூலதன ஆதாயம் குறித்தும், நிறுவனர் கள் நிதியை வேறு பணிகளுக்கு மாற்று வது குறித்து எச்சரித்தும், அது குறித்து இந்நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகள் அடங்கிய குழு விவாதிக் கவே இல்லை. ஆறு வங்கிகள் இந் நிறுவனத்துக்கு கடன் அளித்துள்ளன. குரோல் நிறுவனம் தணிக்கை செய்வ தற்கு கட்டணமாக ரூ. 20 லட்சத்தை எஸ்பிஐ அளித்துள்ளது. அந்த தணிக் கையை வங்கிகள் ஒருபோதும் பார்த்த தாகவே தெரியவில்லை என்று எஸ்ஐஎஃப்ஓ குறிப்பிட்டுள்ளது.
இரு வங்கிகளுமே டெலாய்ட் நிறுவனம் அளித்த தணிக்கையை குறைகூறின. ஆனால், கடன் வழங்கிய வங்கிகளின் சட்ட ஆலோசனை நிறுவனமான ஷரத்துள் அமர்சந்த் மங்கள்தாஸ் அண்ட் கோ அளித்த அறிவுரையை இவ்விரண்டு வங்கிகளும் ஏற்கவேயில்லை என்று எஸ்ஐஎஃப்ஓ தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது.
இது தொடர்பாக இரு வங்கிகளும் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
டெலாய்ட் நிறுவனம் 2012-14 மற்றும் 2014-16 வரையான காலத்தில் தணிக்கை செய்துள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே அறிக்கையை அளித்துள்ளது.
டெலாய்ட் நிறுவனம் அளித்த தணிக்கை அறிக்கை அடிப்படையில் சட்ட நிறுவனம் தனது பரிந்துரையை அளித்துள்ளது. இந்த காலகட்டத்திலேயே நிதி முறைகேடு அல்லது பணத்தை தள்ளுபடி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எஸ்ஐஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
டெலாய்ட் நிறுவனம் நடத்திய தணிக் கையில் அந்நிறுவனம் அளித்த கடன் உத்தரவாத கடிதங்கள் நம்பகமானவையா என்பதைக் குறிப்பிடவில்லை. மேலும் ரூ.39,062 கோடி நிதி பூஷண் ஸ்டீல் நிறுவனத்தின் ஒடிஷா அலுவலகத்துக்கு மாற்றப்பட்ட விவரம் அதில் இல்லை என்றும் தெரிகிறது. அதேசமயம் கடன் உத்தரவாதக் கடிதம் (எல்சி) மூலம் வங்கி களிடமிருந்து ரூ. 194 கோடியை நிறுவனம் பெற்றதற்கான ஆதாரங்களை எஸ்ஐ எஃப்ஓ கண்டுபிடித்துள்ளது. இவ்வித பரி வர்த்தனைக்கு பூஷண் ஸ்டீல் நிறுவனத் துக்கு வங்கிகள் ஒப்புதல் அளித்திருக் கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணைப் பொதுமேலாளர் அனில் குமார் அனுப்பிய அறிக்கையில் நிறுவனம் அளித்த எல்சி அனைத்துமே உண்மையானவை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், எஸ்பிஐ மற்றும் பிஎன்பி அதிகாரிகளின் கருத்துகள் முரண்பாடாக உள்ளன. ஆனால், எந்த விஷயங்களில் முரண்பட்ட கருத்துகள் உருவானது என்பது புரியவில்லை என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் பிராந்திய மேலாளர் பிரணாய் குமார், பூஷண் ஸ்டீல் நிறுவனம் குறித்து சட்ட நிபுணர் கள் அளித்த பரிந்துரையை வேறு எவருக் கும் தெரிவிக்கக் கூடாது என்ற சூழலில் நிறுவனத்துக்கே தெரிவித்தது விசாரணை யில் தெரியவந்துள்ளதாக எஸ்ஐஎஃப்ஓ குற்றம் சாட்டியுள்ளது. வேறு கிளைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் இந்த தக வலை பரிமாற்றம் செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.