Published : 21 Sep 2019 03:39 PM
Last Updated : 21 Sep 2019 03:39 PM

கார்ப்பரேட் வரிக்குறைப்பின் சாதக பாதகங்கள்: மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை கூறுவதென்ன?

மும்பை,

நிதியமைச்சர் வெள்ளிக்கிழமையன்று பொருளாதார சீர்த்திருத்தத்திற்கான பல அறிவிப்புகளை மேற்கொண்டார், அதில் கார்ப்பரேட் வரிக்குறைப்பு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்குள் முதலீடு பெருகும், வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் கார்ப்பரேடி வரிக்குறைப்பு நிறுவனங்களுக்கு கடன் அளவில் நம்பிக்கையையும் சாதக நிலைகளையும் தோற்றுவிக்கும் ஆனால் அரசின் வருவாயில் இடர்பாடுகளை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமையன்று கார்ப்பரேட் வரியை 30% லிருந்து 22% ஆகக் குறைத்தார். தற்போது உலக அளவில் குறைந்த கார்ப்பரேட் வரி கொண்ட நாடு இந்தியாதான்.

இந்நிலையில் மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் இது குறித்து கருத்துக் கூறிய போது, “வரிக்குப் பிந்தைய வருவாய்களை நிறுவனங்கள் பெருக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிதிப்பற்றாக்குறை இலக்கை சந்திப்பதில் அரசுக்கு இடர்பாடுகளை அதிகரிக்கலாம்.”

இந்தியாவில் மூடீஸ் தரமதிப்பீட்டில் இருக்கும் நிதியல்லாத நிறுவனங்களில் சரக்கு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இந்த வரிக்குறைப்பின் பலன்களை அடையும். மேலும் கூடுதல் வருவாயை நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தில் மறுமுதலீடு செய்யுமா அல்லது கடன்களை குறைக்கப் பயன்படுத்துமா அல்லது பங்குதாரர்களின் லாபத்திற்காகச் செலவிடுமா என்பதைப் பொறுத்தே கார்ப்பரேட் கிரெடிட் நிலவரங்களை எந்த அளவுக்கு பலப்படுத்த முடியும் என்பதைத் தீர்மானிக்கும்.

மொத்தமாக ரேட்டிங்கில் உள்ள இந்திய நிதிநிறுவனம் அல்லாத நிறுவனங்கள் மார்ச் 2019-ல் முடிந்த நிதியாண்டில் வரிக்கு முந்தைய நிகர வருவாயாக 35 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. 2019 நிதியாண்டில் இந்த நிறுவனங்களின் வருவாயில் மாற்றங்கள் இருக்காது எனும் பட்சத்தில் இந்த நிறுவனங்கள் தற்போதைய வரிக்குறைப்பினால் 3 பில்லியன் டாலர்கள் சேமிக்கும், என்கிறது மூடிஸ் நிறுவனம்.

ஜூலை 2019 பட்ஜெட் மதிப்பீடுகளின் படி கார்ப்பரேட் வரி வருவாய் ரூ.7.2 ட்ரில்லியன்களாகும் (அதாவது 108.5 பில்லியன் டாலர்கள், ஜிடிபியில் சுமார் 4%) கார்பப்ரேட் வரி குறைக்கப்பட்டால் அதன் மூலம் வருவாய் நடப்பு நிதியாண்டில் ரூ.1.5 ட்ரில்லியன் குறையும்.

ஆகவே மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் தன் உபரி ரிசர்வ் தொகையை மத்திய அரசுக்கு மாற்றியது கார்ப்பரேட் வரிக்குறைப்பை பேலன்ஸ் செய்யும் என்றாலும் கூட மேலும் நிதியைத் திட்டமிடுதல் வாய்ப்பைக் குறுக்கும். வருவாய் இழப்பை ஈடுகட்ட அரசு செலவினங்களைக் குறைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது, என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x