Published : 21 Sep 2019 09:42 AM
Last Updated : 21 Sep 2019 09:42 AM

பொருளாதார நெருக்கடியிலும் தமிழகத்தில் சிறப்பான வளர்ச்சி

சென்னை

நாட்டின் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையிலும், தமிழகத்தில் சிறப் பான வளர்ச்சி பதிவாகியிருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நாட்டின் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறை பெரும் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. பல நிறுவனங்களில் வேலையிழப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இத் தகைய நெருக்கடியிலும் தமிழகத் தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 2018-19 நிதி ஆண்டில் 6.81 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சி 8.17 சதவீதமாகப் பதிவாகி உள்ளது. இது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சியாகவும் உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் கஜா புயல், பருவமழை பொய்த்துப் போனது உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்த நிலையிலும் இத்தகைய சிறப்பான வளர்ச்சி பதிவாகி உள்ளது.

வழக்கமாக பருவமழை ஒட்டு மொத்த தமிழக மழையளவில் 50 சதவீத பங்கைக் கொண்டிருக்கும். ஆனால், கடந்த நிதி ஆண்டில் 44 செ.மீ மழை பொழிய வேண் டிய நிலையில் 33 செமீ மழை மட்டுமே பெய்தது. அதேபோல், கஜா புயலின்போது பல லட்சக் கணக்கான தென்னை மரங்கள், பயிர் விளைச்சல்கள் பாதிக்கப்பட் டன. பல நூறு கோடி பொருட் சேதங்களும் ஏற்பட்டன. இத் தகைய நெருக்கடிகளைச் சந்தித்த நிலையிலும், தமிழகத்தின் வளர்ச்சி யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் நிலை துறைகள், பிற இரண்டாம் நிலை துறைகள் மற்றும் சேவைத் துறை களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்ச்சியை அடைந்துள்ளன. முதல் நிலை துறை 9.9 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. வேளாண் துறை வளர்ச்சி 11.31 சதவீதமாக உள்ளது. கிட்டதட்ட இரண்டு இலக்க வளர்ச்சி இது. உணவுப் பொருட்கள் உற்பத்தி 104.02 லட்சம் டன் என்ற அளவில் பதிவாகியுள்ளது. இரண்டாம் நிலை துறைகள் 6.59 சதவீதமும் மற்றும் சேவைத் துறை 8.24 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகமும் பாதிப்புக்குள்ளானது. ஆனால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் பொருளாதாரம் சிறப்பான நிலை யில் இருந்துவருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காட்டி லும் அதிக வளர்ச்சியை தமிழகப் பொருளாதாரம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகமும் பாதிப்புக்குள்ளானது. ஆனால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருந்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x