Published : 20 Sep 2019 10:14 PM
Last Updated : 20 Sep 2019 10:14 PM

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 1500 சிசி டீசல் வாகனங்கள், 1200 சிசி பெட்ரோல் வாகனங்களுக்கு  12% ஆக வரி குறைப்பு - முக்கிய அம்சங்கள்

பனாஜி

செப்டம்பர் 20, 2019 அன்று கோவாவில் நடைபெற்ற 37-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய வரிக்குறைப்பு முடிவுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டிக்களை அவர் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

* 13 பேர் வரை பயணிக்கக் கூடிய 1500 சிசி டீசல் வாகனங்கள் மற்றும் 1200 சிசி பெட்ரோல் வாகனங்களுக்கான செஸ் வரி 12% ஆகக் குறைப்பு

* உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் துணை ராணுவப்படையினருக்கான குழுக் காப்பீடுக்கான ஜிஎஸ்டி ரத்து.

* வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* சமையல் புளி மீதான ஜிஎஸ்டி வரி முற்றிலும் ரத்து செய்யபடுகிறது

* கஃபைன் கலந்த பானங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 28% ஆக அதிகரிப்பு இதனுடன் 12% இழப்பீடு செஸ் வரி. மொத்தம் 40% வரி.

* பேக்கேஜ் பொருட்களான பாலிப்ரொபிலின் பைகள் மற்றும் சாக்குகள் மீதான ஜிஎஸ்டி ஒரே சீராக 12% ஆக நிர்ணயம்.

* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத சில குறிப்பிட்ட ராணுவப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி முழுதும் ரத்து

* பாலிஷ்டு ராசிக் கற்களுக்கான ஜிஎஸ்டி 3% லிருந்து 0.25% ஆகக் குறைப்பு

* நகை ஏற்றுமதிக்கு ஜிஎஸ்டி ரத்து

ஜூலை 2017 முதல் செப்.30ம் தேதி வரையிலான மானுட நுகர்வுக்கு அல்லாத மீன் உணவுப்பொருளுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

* ரயில்வே பெட்டிகளுக்கான ஜிஎஸ்டி 5% லிருந்து 12% ஆக அதிகரிப்பு

* தங்கும் விடுதிகளைப் பொறுத்தவரை ஒர் இரவு தங்குவதற்கான ரூ.1000 கட்டணம் வரை ஜிஎஸ்டி கிடையாது. ரூ.1001 முதல் ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு வரி 18%லிருந்து 12% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

* அதே போல் ரூ.7,500க்கும் அதிகமான கட்டண ரூம்களுக்கான ஜிஎஸ்டி 28%லிருந்து 18% ஆகக் குறைப்பு.

* அவுட் டோர் கேட்டரிங் மீதான 18% வரி 5% ஆகக் குறைப்பு.

* பாதாம் பால் மீதான வரி 18%.

* ஜிப்புகள் மீதான வரி 18%லிருந்து 12% ஆக ஏற்கெனவே குறைக்கப்பட்டது.

* டயமண்ட் ஜாப் ஒர்க் மீதான வரி 5%லிருந்து 1.5% ஆகக் குறைப்பு

* பொறியியல் தொழிற்துறையின் இயந்திர வேலைப்பாடுகளுக்கான வரி 18%லிருந்து 12% ஆகக் குறைப்பு

* ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளி பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது.

* கடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x