Published : 20 Sep 2019 07:21 PM
Last Updated : 20 Sep 2019 07:21 PM

நிதியமைச்சர் அறிவிப்புக்குப் பின் உலக அளவில் இந்தியாவில்தான் குறைந்த கார்ப்பரேட் வரி 

கார்ப்பரேட் வரியை 22% ஆக குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து கார்ப்பரேட் வரியில் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில்தான் இந்த வரி குறைவு என்று தெரியவந்துள்ளது.

ஆனாலும் இந்தச் சலுகை மற்ற விலக்குகளையும் சலுகைகளையும் பெறாத நிறுவனங்களுக்குத்தான் என்றாலும் இப்போது இந்த வரிக்குறைப்பு மூலம் ஆசியாவிலும் உலகின் சில நாடுகளையும் ஒப்பிடும்போது இந்தியாவில் கார்ப்பரேட் வரி குறைவு என்றாகியுள்ளது, இதன் மூலம் முதலீடு அதிகரிக்கும் வேலை வாய்ப்புப் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் கே.பி.எம்.ஜி.தரவுகளின் படி கார்ப்பரேட் வரி மியான்மரில் 25%, மலேசியாவில் 24%, இந்தோனேசியா மற்றும் கொரியாவில் 25%, இலங்கையில் 28%. சீன நிறுவனங்கள் கூட 25% வரி செலுத்துகின்றன, பிரேசிலில் 34% வரி நடைமுறையில் உள்ளன.

கார்ப்பரேட் வரியின் உலக சராசரி தற்போது 23.79%. ஆசிய கார்ப்பரேட் வரி சராசரி 21.09%.

2003லிருந்து உலக அளவில் கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இந்தியாவில் 30% ஆக இருந்தது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அதிரடி வரிக்குறைப்பு மூலம் இந்திய நிறுவனங்கள் உலக அளவில் சரிசம போட்டியிட முடியும்.

ஆனாலும் இத்தகைய வரிக்குறைப்பின் விளைவுகளைப் பார்த்தோமானால் கடந்த ஆண்டு பல்வேறு வரிச்சலுகைகள் மூலம் நாட்டின் வரி வருவாயில் ரூ.1.08 லட்சம் கோடி வருவாய் இழப்பும், தற்போதைய வரிக்குறைப்பினால் ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பும் ஏற்படும்.

-ராஜலஷ்மி நிர்மல், தி இந்து பிசினஸ்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x