Published : 20 Sep 2019 10:35 AM
Last Updated : 20 Sep 2019 10:35 AM

இன்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி குறைப்பு குறித்து முக்கிய முடிவு

புதுடெல்லி

ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம் கோவா வில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. பொருளாதார தேக்க நிலையை முடுக்கி விட அரசு சமீபத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

இந்நிலையில் ஆட்டோமொபைல் துறை யினர் வரி குறைப்பு நடவடிக்கையை எதிர் நோக்கியிருக்கின்றனர். இத்துறையில் நில வும் தேக்க நிலையைப் போக்கவும், வேலை யிழப்பை தடுக்கவும் அரசு வரி குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. தற்போது ஆட்டோ மொபைல் துறைக்கு 28 சதவீத வரி விதிப்பு உள்ளது.

நாடு முழுவதும் ஒரே முனை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறி முகம் செய்யப்பட்ட பிறகு, வரி குறைப்பு உள் ளிட்ட எந்த முடிவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்தான் தீர்மானிக்க முடியும். இக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டால் தான் வரி குறைப்பு நடவடிக்கை சாத்திய மாகும். இதனால் கோவாவில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி பிஸ்கெட் தயாரிப்பு துறையினரும், அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் தயாரிப்பு (எஃப்எம்சிஜி) நிறுவனங்களும் வரி குறைப்பு கோரி அரசிடம் முறையிட்டுள்ளன. இதுகுறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரா மன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத் தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற் கின்றனர். வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டால் அது தங்களின் வரி வருமானத்தை வெகுவாக பாதிக்கும் என்பதால், பெரும் பாலான மாநிலங்கள் வரி குறைப்பு நடவடிக் கைக்கு ஒப்புதல் அளிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதேசமயம் சிறப்பு தொகுப்பாக செங்கல் சூளை, மணல் குவாரி, கல்லுடைக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப் படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இரு மாநிலங்களையும் ஜிஎஸ்டி கவுன்சிலில் சேர்ப்பது தொடர்பான விதிமுறைகளும் இக்கூட்டத்தில் மேற் கொள்ளப்படும். கேரள மாநில அரசு பரிந் துரைத்துள்ளபடி தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணக் கற்களுக்கு இ-வே பில் முறை கொண்டு வரலாம் என்பதும் ஆராயப் பட உள்ளது. ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள நிறு வனங்களை ஆதார் அட்டையுடன் இணைப் பது தொடர்பான காலாண்டு ஆய்வும் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

நாளொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வாடகை விதிக்கும் ஹோட்டல்களுக்கு 18 சதவீத வரி விதிக்கலாம் என்பதும் குழுவின் பரிசீலனை யில் உள்ள முக்கியமான விஷயங்களாகும். தற்போது ஒரு இரவுக்கு ரூ.7,500 அறை வாடகை இருந்தாலே 18 சதவீத வரி விதிக்கப் படுகிறது.

தொலைத் தொடர்பு சேவைக்கு தற் போது விதிக்கப்படும் 12 சதவீத வரியை 18 சதவீதமாக உயர்த்தலாம் என்ற பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது. சொகுசு கப்பல் பயண டிக்கெட் மீது விதிக்கப்படும் 18 சத வீத வரியை குறைக்கும் பரிந்துரையையும் ஜிஎஸ்டி நிர்ணய குழு ரத்து செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x