

புதுடெல்லி, பிடிஐ
திருவிழா சீசன்களில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க கடன்கள் வழங்கப்படவுள்ளதால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வங்கிகளில் வாங்கி திரும்பச் செலுத்தாமல் இருக்கும் வாராக்கடன்களை செயலில் இல்லாத சொத்துக்களாக மார்ச் 31, 2020 வரை அறிவிக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வங்கிகள் அல்லாத நிதித்துறையினர் மற்றும் சில்லரை கடன் பெறுவோர் ஆகியோருடன் பொதுத்துறை வங்கிகள் 400 மாவட்டங்களில் சந்திப்புகளை ஏற்பாடு செய்து வீடுவாங்குவோர் மற்றும் விவசாயிகள் உட்பட கடன் பெறுவோர் ஆகியோருக்கு கடன் அளிப்பது குறித்து முடிவெடுப்பார்கள் என்றார் நிர்மலா சீதாராமன்.
கடன் வழங்குவது தொடர்பான பொதுக்கூட்டங்கள் அல்லது சந்திப்புகள் முதற்கட்டமாக செப்டம்பர் 24 முதல் 29 வரையில் 200 மாவட்டங்களிலும் அக்டோபர் 10 முதல் 15 தேதிகளுக்கிடையில் அடுத்த 200 மாவட்டங்களிலும் நடக்கும் என்று கூறியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி அதிகம் கடன் வழங்கும் திட்டத்திற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அக்டோபரில் தீபாவளிப் பண்டிகை வருவதால் பெரிய அளவில் ஷாப்பிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டங்களில் சில்லரை, விவசாய, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வங்கி வாராக்கடன்களை செயலில் இல்லாத சொத்துக்களாக மார்ச் 31, 2020 வரை அறிவிக்க வேண்டாம் என்று வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.