Published : 19 Sep 2019 06:27 PM
Last Updated : 19 Sep 2019 06:27 PM

பங்குச் சந்தைக் குறியீடு சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு, நிப்டி 7 மாதத்தில் இல்லாத சரிவு

மும்பை, பிடிஐ

மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வியாழனன்று 470.41 புள்ளிகள் சரிவு கண்டு 36,093.47 புள்ளிகளாக இருந்தது.

இதே போல் பரந்துபட்ட தேசியப் பங்குச் சந்தை குறியீடான என்.எஸ்.இ. நிப்டி 135.85 புள்ளிகள் சரிவு கண்டு 10,704.80 புள்ளிகளாக நிறைவடைந்தது, இது கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிவு கண்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி வரிவசூல் செப்.17ம் தேதி வரை 4.7% தான் வளர்ந்துள்ளது, ஆனால் முழு ஆண்டுக்கான இலக்கு 17.5% ஆக நிர்ணயிக்கப்பட்டது, இது தேவைப்பாடு குறைவையும் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாட்டையும் பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்செக்ஸ் குறியீட்டில் யெஸ் பேங்க் பங்குகள் பெரிய அடி வாங்கின. 15.52% யெஸ் பேங்க் பங்குகள் சரிவு கண்டன. இண்டஸ் இந்த் வங்கி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் பேங்க் பங்குகளும் 3.59% விலை வீழ்ச்சி கண்டன.

மற்ற துறைகளில் டாடா ஸ்டீல், மாருதி, எஸ்.பி.ஐ., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மகீந்திரா, ஓ.என்.ஜி.சி, வேதாந்தா, பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டார் கார்ப்., டிசிஎஸ் பங்குகள் 3.66% வரை விலை வீழ்ச்சி கண்டன.

டாடா மோட்டர்ஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி, பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1.97% உயர்வு கண்டன.

மும்பைப் பங்குச் சந்தையில் எரிசக்தி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ரியால்டி, ஆட்டோமொபைல், ஹெல்த்கேர், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப த்துறை குறியீடுகள் 2% வரை சரிவு கண்டன. டெலிகாம் மட்டுமே 0.17% உயர்வு கண்டது.

அயல்நாட்டு போர்ட்போலியா முதலீட்டாளர்கள் புதனன்று ரூ.959.09 கோடிகளுக்கான பங்குகளை விற்றனர். இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 6 காசுகள் சரிவு கண்டு அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.71.30 என்று உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x