Last Updated : 01 Jul, 2015 10:47 AM

 

Published : 01 Jul 2015 10:47 AM
Last Updated : 01 Jul 2015 10:47 AM

ஓட்டுநர்களுக்கு கார் கடன் வழங்க சோழமண்டலம் - ஓலா ஒப்பந்தம்

சோழமண்டலம் இன்வெஸ்ட் மெண்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம் ஓலா கேப்ஸ் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்துகொண் டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஓலா கேப்ஸ் ஓட்டுநர்களுக்கு சோழமண்டலம் நிறுவனம் கார் கடன் வழங்கும். இந்த கடன்கள் தினசரி தவணை முறையில் வசூலிக்கும் கடனாக இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஓலா நிறுவனம் ஓட்டுநர்களின் தினசரி வருமானம் மற்றும் பண விவரங் களை உடனுக்குடன் அளிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தம் ஓட்டுநர்கள் தங்களுக்கான சொந்த வாகனங்களை தினசரி வருமா னத்தின் மூலமே வாங்க முடியும். ஓட்டுநர்கள் நிதி சார்ந்த ஒழுங்கு களை உறுதிசெய்வதற்கான தொடக்கமாக இது இருக்கும் என சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெள்ளையன் சுப்பையா கூறினார்.

பணத்தை திரும்ப செலுத்து வதற்கான நடைமுறைகளுக்கு ஒலா நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமென் றும் குறிப்பிட்டார்.

பெருவாரியான ஓட்டுநர்களுக்கு வருமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்கிற எங்களது இலக்கின் தொடக்க முயற்சி என்று இதன் மூலம் ஓட்டுநர்கள் தங்களது சமூக பொருளாதார நிலைமையை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் ஓலா நிறுவனத்தின் தமிழக தலைவர் கூறினார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஓலா நிறுவன ஓட்டு நர்கள் வாகனக் கடன் வாங்கு வதற்கு ஏற்ப எஸ்பிஐ பிரகதி திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தில் வாகனக் கடன் வாங்கும் ஓட்டுநர்கள் மாதாந்திர தவணைக்கு பதில் தினசரி திரும்ப செலுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x