Published : 19 Sep 2019 10:33 AM
Last Updated : 19 Sep 2019 10:33 AM

ஆர்பிஐ-யின் விதிமுறை வங்கிகளை பாதிக்கும் பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் எச்சரிக்கை

மும்பை

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் அளிப்பதற்கு இருந்து வந்த கட்டுபாட்டை கடந்த வாரம் ரிசர்வ் வங்கி தளர்த்தியது. அதன்படி கடன் அளிப்பதற்கான நிபந்தனை வரம்பு 125 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கடன் நிபந்தனை வரம்பு குறைப்பு வங்கிகளைப் பாதிக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் எச்சரித்துள்ளது.

கடன் நிபந்தனை வரம்பு

வாடிக்கையாளர்களின் வருமானத்துக்கு ஏற்ற வகையி லேயே வங்கிகள் கடன் அளித்து வருகின்றன. இதனால் கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்கள், அவர்களின் குறைந்த வருமானத்தின் காரணமாக கடன் பெற முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வாடிக்கையாளர்களுக்கான கடன் நிபந்தனை வரம்பு குறித்த புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

அதன்படி, கடன் நிபந்தனை வரம்பு 125 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக குறைக்கப்பட்டது. தனிநபர் கடன்கள் உட்பட, நுகர் வுப் பொருட்களான மொபைல் போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் ஆகிய வற்றுக்கான கடன் நிபந்தனை வரம்பு குறைக்கப்பட்டது. இதனால் வங்கிகள் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அளிக்கும் என்று கூறப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கடன் வழங்குவதே ஆபத்தானது. அதிலும் தற்போது கடன் நிபந்தனை வரம்பு குறைக்கப்பட்டு இருப்பதால் வங்கிகள் அதிக அளவில் கடன் அளிக்க வேண்டிய நிலை உருவாகும். அது வங்கிகளைப் பாதிக்கும் என்று மூடி’ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 முதல் 2019 வரையிலான நிதி ஆண்டுகளில் பிறவகை கடன்களைவிட தனி நபர் கடன்களே அதிக அளவில் வழங்கப் பட்டு உள்ளன. குறிப்பாக தனியார் வங்கிகளே அதிக அளவில் தனி நபர் கடன்களை வழங்கி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x