

புதுடெல்லி
பொதுத் துறை வர்த்தக நிறுவனங்களான எஸ்டிசி, எம்எம்டிசி, பிஇசி ஆகிய மூன்றும் மூடப்படலாம் அல்லது ஒன்றாக இணைக்கப்பட லாம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்நிறுவனங்களுக்கான தேவை தற்போது இல்லை என்று அவர் கூறினார்.
பிற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ஸ்டேட் டிரேடிங் கார்பரேஷன் (எஸ்டிசி) 1956- ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. குறிப் பாக கிழக்கு ஐரோப்பிய நாடு களுக்கு பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில்வே மற்றும் பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக புரா ஜெக்ட் மற்றும் எக்யூப்மெண்ட் கார்ப ரேஷன் (பிஇசி) என்ற நிறுவனம் எஸ்டிசி-யின் ஒரு அங்கமாக 1971-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1997-ம் ஆண்டு இந்நிறு வனம் தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது. இதற்கிடையே உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் ஏற்றுமதிக்கென்று தனி யாக எம்எம்டிசி என்று நிறுவனம் 1963-ம் ஆண்டு தொடங்கப் பட்டது.
விரைவில் முடிவு
இம்மூன்று நிறுவனங்களும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத் தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. இந்நிறுவனங்களின் பயன்பாடு தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில் இம்மூன்று நிறுவனங்களும் மூடப் படலாம் அல்லது ஒரே நிறுவனமாக மாற்றப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பியூஷ் கோயல் கூறியதாவது, ‘இந்நிறுவனங் களுக்கானத் தேவை இப்போது இல்லை. வெறும் தங்கம் இறக் குமதிக்காக மட்டும் எம்எம்டிசி போன்ற பெரிய நிறுவனங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை. மட்டுமல்லாமல், இவ்வகையான வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசின் வேலையும் அல்ல.
இப்போதைய நிலையில் அரசின்முன் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இம்மூன்று நிறு வனங்களையும் மூடுவது அல்லது இம்மூன்றையும் ஒன்றாக இணைப்பது. இது குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். விரைவில் திட்டவட்டமான முடிவு அறிவிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
எஸ்டிசி மற்றும் பிஇசி ஆகிய இரண்டும் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. 2018-19 நிதி ஆண்டு அறிக்கையில் எஸ்டிசி கடும் பணத்தட்டுப்பாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிதி ஆண்டில் அந்நிறுவனம் ரூ.881 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்து உள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்போது ரூ.1.05 லட்சம் கோடி அளவில் இந்த நிதி ஆண்டில் அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ளும் என்று அறிவித்து இருந்தது குறிப் பிடத்தக்கது.