

மும்பை
கடந்த வாரம் சவூதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் ஆலையில் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப் பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. காலையில் வர்த்தகம் தொடங்கி யவுடன் ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய் விலை 11.09 சதவீதம் உயர்ந்து 66.90 டாலர் என்ற விலையில் வர்த்தகமானது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நான்கு நாள் வர்த்தகத்தில் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய் விலை வாரத்தின் முதல் நாளான திங்களன்று 12 சதவீத அளவுக்கு உயர்ந்தது.
சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனத்தில் யேமனைச் சேர்ந்த ஹௌதி போராட்டக் குழுவினர் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இரண்டு எண்ணெய் ஆலை களில் இந்த தாக்குதல் நடத்தப்பட் டது. அபுதாபியின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அப்குயாக் பகுதியில் உள்ள ஆலையில் டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தப் பட்டது. இந்த ஆலையானது ரியாத் திலிருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
எண்ணெய் சப்ளை பாதிக்கப்படாது
இதனால், இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு பாதிக்கப்படாது என்று சவூதி அரேபியா உறுதிபட தெரிவித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை சவுதி அரேபியா பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் அராம்கோ ஆலையில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவானது. ஆனால் அராம்கோ நிறுவனத்தினரே இந்தியாவுக்கான சப்ளை தொடரும் என்று உறுதி அளித்துள்ளனர். நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் தெரிவித்துள்ளது.