

புதுடெல்லி
முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் புதிய புகார் அளிப்பு கட்ட மைப்பை உருவாக்க சந்தைக் கட்டுப்பாட்டு வாரியம் (செபி) திட்ட மிட்டுள்ளது. இதன் மூலம் ஆடிட் டர்கள், தணிக்கையாளர்கள் நிறு வனங்களின் முறைகேடுகளைத் தெரிவிக்கலாம்.
நிதி முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களைப் பற்றிய விவரங் கள் ஆரம்ப நிலையிலேயே வெளி வருவதில்லை. அந்நிறுவனத்தை தணிக்கைக்கு உட்படுத்தும்போதே முறைகேடுகள் குறித்த விவரங்கள் வெளிவருகின்றன. இதனால், முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுப்பது தாமதமாகிறது. இந் நிலையில் முறைகேடுகளில் ஈடு படும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காக புதிய புகார் அளிப்பு முறையை செபி கொண்டு வர உள்ளது. அதன்படி, அந்நிறுவனத்துடன் தொடர்புடை யவர்களே அங்கு நடைபெறும் முறைகேடுகள் குறித்த விவரங் களை செபிக்கு அளிக்க முடியும். குறிப்பாக ஆடிட்டர்கள் உள்ளிட்ட தணிக்கையாளர்கள் நிறுவனங்கள் மீதான புகார்களை இந்தக் கட்ட மைப்பில் தெரிவிக்கலாம்.
நிதி முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்கள், அதன் தணிக்கை காலத்தின்போது முறையான ஒத்துழைப்பை அளிக்காமல், முறை கேடுகளை மறைக்க முயற்சிக்கின் றன. இதனால் அந்நிறுவனத்தை தணிக்கை செய்யும் அதிகாரிகள், தணிக்கை செய்வதிலிருந்து பாதி யிலேயே வெளியேறும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வரு கிறது. சில சமயங்களில் ஆடிட் டர்களையும் நிறுவனங்கள் தங் களின் முறைகேடுகளை மறைக்கப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்நிலையில் நிறுவன முறை கேடுகள் குறித்து அதன் ஆடிட்டர் கள் புகார் அளிக்கும் முறையில் புதிய கட்டமைப்பு இருக்கும் என செபி தெரிவித்துள்ளது.
மேலும் பங்குச் சந்தைப் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் அதன் பங்கு வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்டாலும் அது குறித்த தக வல்கள் வெளிவருவதில்லை. இந்நிலையில் அந்நிறுவனத்தை சார்ந்த நபர்கள், இவ்வகையான மோசடி குறித்து தகவல் அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சன்மான மும் அளிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறு வனத்தின் சந்தை மோசடி குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.1 கோடி வரை சன்மானம் அளிக்கப்படும். இந்த சன்மானம் அந் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆடிட்டர்கள், வக்கீல்கள் ஆகியோருக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த புதிய புகார் அளிப்பு திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்ப தாகவும், இதை நடைமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருவதாகவும் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.