

புதுடெல்லி
இந்த ஆண்டில் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 11 நிறுவனங்கள் பங்கு விற்பனை மூலம் மொத்தமாக ரூ.10,000 கோடி அளவிலேயே நிதி திரட்டி உள்ளன. சென்ற ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 24 நிறுவனங்கள் ரூ.30,959 கோடி அளவில் நிதி திரட்டின. அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் பொதுப் பங்கு விற்பனை சரிந்துள்ளது.
தற்போது சந்தையில் காணப் படும் நிலையற்ற தன்மையினால் மீதமுள்ள மூன்று மாதங்களில் பங்கு விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வது சாத்திய மில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பொதுப்பங்கு வெளியீட்டுக்காக 23 நிறுவனங் கள் செபியிடம் விண்ணப்பித்து இருந்தன. அதில் 11 நிறுவனங் களுக்கு அனுமதி கிடைத்தது.
இந்த ஆண்டின் ஜனவரியில் தொடங்கி இதுவரை மொத்தமாக அந்த நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.10,000 கோடி. கடந்த 2017-ம் ஆண்டு 36 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. அவை மொத்த மாக ரூ.68,000 கோடி அளவில் நிதி திரட்டின. இந்த ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. அந்நிறு வனங்கள் திரட்டிய நிதி அளவும் குறைவு.