

புதுடெல்லி: சந்தை மதிப்பின் அடிப்படையில் முதல் பத்து இடங்களில் உள்ள ஆறு நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.50,580 கோடி உயர்ந்துள்ளது. இவற்றில் ஐந்து நிறுவனங்கள் வங்கித் துறையைச் சார்ந்தவை.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றின் சந்தை மதிப்பு கடந்த வாரம் உயர்ந்தது. முதல் பத்து இடங்கள் பட்டியலில் உள்ள டிசிஎஸ், ஹெச்யூஎல், இன்ஃபோசிஸ், ஐடிசி ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் குறைந்தது.
எஸ்பிஐ-யின் சந்தை மதிப்பு ரூ.15,841 கோடி உயர்ந்து ரூ.2,60,330 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.14,062 கோடி உயர்ந்து ரூ.2,66,874 கோடியாகவும், கோடக் மஹிந்திரா வங்கியின் சந்தை மதிப்பு ரூ.8,011 கோடி உயர்ந்து ரூ.2,83,330 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.3,036 கோடி உயர்ந்து ரூ.6,17,170 கோடியாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,933 கோடி உயர்ந்து ரூ.7,76,891 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சியின் சந்தை மதிப்பு ரூ.7,695 கோடி உயர்ந்து ரூ.3,60,062 கோடியாகவும் உள்ளது.