குழந்தையை தத்து எடுக்க ரூ.50,000: ஊழியர்களுக்கு பிளிப்கார்ட் சலுகை

குழந்தையை தத்து எடுக்க ரூ.50,000: ஊழியர்களுக்கு பிளிப்கார்ட் சலுகை
Updated on
1 min read

தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தையை தத்து எடுக்க ரூ.50,000 நிதிஉதவி அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட். சட்ட ரீதியாக குழந்தையை தத்து எடுக்கும் நடைமுறை செலவுகளுக்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என பிளிப்கார்ட் கூறியுள்ளது.

பேறுகால சலுகைகளைப் போல, இந்த புதிய சலுகையை பணியாளர்களுக்கு பிளிப்கார்ட் வழங்குகிறது. இந்த நடைமுறை ஜூலை 10 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிளிப்கார்ட் செய்தி தொடர்பாளர் இந்த தொகையை சட்ட செலவுகள், ஏஜென்சி செலவுகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு ஆகும் செலவுகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் 12 மாதத்துக்குட்பட குழந்தையை தத்து எடுக்கும் பெண் பணியாளர்கள், பிரசவ காலத்தில் அனுமதிக்கப்படும் சலுகைகளை பெறலாம். குறிப்பாக ஆறு மாதங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பும், நான்கு மாதங்கள் நேர மாற்றங்களுடனும் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை களை தத்து எடுத்தால் மூன்று மாதங்கள் சம்பள விடுப்பும், நான்கு மாதங்கள் நேர மாற்றங்களுடன் வேலை செய்யலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார். ஆண் பணியாளர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படும். அடுத்த நான்கு மாதங்கள் நேர மாற்றத்துடன் வேலை செய்யலாம் என பிளிப் கார்ட் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in