Published : 15 Sep 2019 11:56 AM
Last Updated : 15 Sep 2019 11:56 AM

மத்திய அரசின் சலுகைகள் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்: தொழில்துறையினர் கருத்து

புதுடெல்லி

மத்திய நிதி அமைச்சர் நேற்று வெளியிட்ட சலுகைகள் அனைத் தும் மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க உதவும் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.50 ஆயிரம் கோடியும், ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடியும் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதுகுறித்து இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறியதாவது:

மத்திய நிதி அமைச்சரின் அறி விப்பு ஒருங்கிணைந்த வகையி லானது. இது குறுகிய காலத் திலேயே பலனளிக்கும் விதமாக வும் பொருளாதாரத்தை ஊக்கு விக்கவும் உதவும். மிகவும் நெருக் கடியில் சிக்கியுள்ள இரண்டு துறைகளுக்கு உதவும் அறிவிப்பே பிரச்சினையில் பெரும்பகுதிக்கு தீர்வு காண்பதாக அமைந்துவிடும். குறிப்பாக ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதித் துறையாகும். மத்திய நிதி அமைச்சர் இத்தகைய சலுகைகள் அனைத்தையும் தொழில் துறை யினரின் பரிந்துரையின்பேரில் வெளியிட்டுள்ளது மிகவும் வர வேற்கத்தக்கது என்றார்.

ரியல் எஸ்டேட் துறையினர் வெளி வர்த்தகக் கடன் (இசிபி) வாங்குவதற்கான வழிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது முடங் கிப் போயுள்ள வீட்டு வசதி திட் டங்களை மேலும் புத்துயிர் பெற வழிவகுக்கும்.

மேலும் ஏற்றுமதித் துறைக்கு உடனடி உதவி தேவை. ஏனெனில் நடப்பு ஆண்டிலேயே ஏற்றுமதி விகிதம் தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது. இப்போது நிதி அமைச்சர் அறிவித்துள்ள சலுகை யானது ஏற்றுமதியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான காப்பீடு வரம்பும் உயர்த்தப்பட் டுள்ளது. மேலும் ஏற்றுமதித் துறை யினருக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்யவும், விமான நிலை யங்கள் மற்றும் துறைமுகங் களிலிருந்து ஏற்றுமதி பொருட்கள் உரிய காலங்களில் செல்வதை கண்காணிக்கவும் குழு அமைக்கப் பட வேண்டும் என்பது இத்துறை யினரின் நீண்ட கால கோரிக்கை யாகும். இந்திய தயாரிப்புகள் உரிய காலங்களில் ஏற்றுமதி செய் யப்படுமாயின் அது பன்னாட்டு போட்டிகளை எதிர்கொள்ள உதவி யாக இருக்கும் என்றும் பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்றுமதி உயரும்

ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ் டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சரின் நடவடிக்கை உள்ளது என்று தொழில்துறை கூட்டமைப்பான ‘அசோசேம்’ கருத்து தெரிவித் துள்ளது.

‘இந்திய ஏற்றுமதித் துறையினர் தற்போது அதிக அளவில் நெருக் கடிகளை எதிர்கொண்டு வருகின் றனர். பெரும்பாலான நாடுகள் அதிக அளவில் வரி விதித்து இந் திய தயாரிப்புகளை போட்டியிட முடியாத சூழலுக்கு தள்ளிவிடு கின்றன. தற்போது அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போரும் இந்திய ஏற்றுமதியாளர் களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழலில் இந்திய ஏற்றுமதித் துறையினருக்கு சலுகை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதை அரசு தற்போது மேற்கொண்டுள்ளது வரவேற்புக்குரியது’ என்று அசோ சேம் தலைவர் பி.கே. கோயங்கா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதியாளர்களுக்கு அதிக கடன் கிடைக்க வழி செய்துள்ளது. ஏற்றுமதி பொருட்கள் விரைவில் துறைமுகங்களிலிருந்து செல் வதற்கு ஏற்பாடு உள்ளிட்ட நடவடிக் கைகள் வரவேற்கத்தக்கது என் றும் அவர் குறிப்பிட்டார்.

வரி மதிப்பீடுகளை கம்ப்யூட்டர் மூலமாக மேற்கொள்வதன் மூலம் அதிகாரிகளின் குறுக்கீடுகள் முற் றிலுமாக தவிர்க்கப்படுவது வர வேற்புக்குரியது. வரித்துறையின ருக்கு மிகவும் தெளிவாக நிதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளது வரவேற்புக்குரியது. குறிப்பாக வர்த்தகத்துக்கு உதவுவது தவிர வழக்கு போடுவது அதிகாரிகளின் வேலை அல்ல என்பதை தெளி வாக சுட்டிக் காட்டியிருப்பது இத் துறையினருக்கு மிகுந்த நிம்மதி அளிக்கும் விஷயம் என்று கோயங்கா சுட்டிக்காட்டினார்.

கட்டுமானத் துறையில் ரூ.40 ஆயிரம் கோடி வரையிலான திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. இதற்கு ஓரளவு நிவாரணமாக ரூ.20 ஆயிரம் கோடி வரை ஒதுக்கீடு செய்ய முன்வந்திருப்பது இத்துறையில் முடங்கிப்போன திட்டங்களை செயல்படுத்த உதவும் என்றார்.

இத்துறையினர் வெளிக் கடன் வாங்கும் அளவை தளர்த்தியிருப் பதன் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x