

சென்னை
சர்வதேச அளவில் உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 10 நாட்களாக தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், இந்தியாவின் ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னை யில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.224 குறைந்து ரூ.28,672-க்கு விற்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு பிறகு தங்கம் விலை கணிசமாக குறைந்ததால், நகை கடைகளில் நேற்று வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.