Published : 12 Sep 2019 06:46 PM
Last Updated : 12 Sep 2019 06:46 PM

கட்டண டாக்ஸி சேவைகளினால் ஆட்டோமொபைல் வர்த்தக மந்தநிலை ஏற்படவில்லை: ஆய்வில் தகவல்

மும்பை, புளூம்பர்க்

உபர், ஓலா போன்ற கட்டண டாக்ஸி சேவைகளினால் ஆட்டோமொபைல் தொழிற்துறையில் மந்த நிலை ஏற்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால் பழைய கார்கள் விற்பனை அதிகரிப்பினால், அதாவது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் மறுவிற்பனையே ஆட்டோமொபைல் வர்த்தகச் சரிவுக்குக் காரணம் என்று ஈடல்வீஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் பழைய கார்களின் விற்பனை 2012-ல் புதிய கார்களைக் காட்டிலும் 0.8%லிருந்து 2019 மார்ச்சில் 1.2% அதிகரித்துள்ளது, இதனையடுத்து ஆண்டு விற்பனை வளர்ச்சி விகிதம் 11% ஆக அதிகரிக்க இதே காலக்கட்டத்தில் புதிய கார்களின் விற்பனை 4% மட்டுமே அதிகரித்துள்ளது.

புதிய கார்கள் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்குச் சரிவு கண்டது. ஓராண்டுக்கு முந்தைய டெலிவரிகளிலிருந்து விற்பனை 41% சரிவு கண்டு 115,497 யூனிட்களாகக் குறைந்தது.

தற்போதைய மந்த நிலை வருவாய் வளர்ச்சிக் குறைவு மற்றும் வீட்டுச் சேமிப்புக் குறைவு, ஏற்கெனவே விற்கப்பட்ட கார்களை வாங்குவது ஆகிய போக்குகளினால் ஏற்பட்டுள்ளது என்கிறது இந்த ஆய்வு. புதிய கார்களை வாங்குவதை விட பழைய கார்களை வாங்குவது பெரிய அளவில் நுகர்வோருக்கு சவுகரியமானதே ஆட்டோமொபைல் சரிவுக்குக் காரணம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளாகவே பழைய கார் விற்பனை ஒழுங்கமைக்கப்பட்ட விற்பனையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக நுகர்வோர் நம்பிக்கையும் இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. பழைய கார்களை வாங்குவது பணத்துக்கான மதிப்பை ஓரளவுக்கு பெற்றுத்தருவதான நுகர்வோரின் செண்டிமெண்ட் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வரியையும் மத்திய அரசு குறைத்தது நுகர்வோர் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் சில குறிப்புகள் இதோ:

2019-ல் 6 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் பழைய கார்களின் விற்பனை 28% அதிகரித்துள்ளது. 2017-ல் இந்த செக்மண்ட் பூஜ்ஜியமாக இருந்தது.

ஏற்கெனவே வாங்கிய கார்களை வாங்கும் 50% நுகர்வோரின் வயது 25-34.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான நிதிப் பகிர்மானம் கடந்த 3 ஆண்டுகளில் 10%லிருந்து 17% ஆக அதிகரித்துள்ளது.

பயன்படுத்திய கார்களை விற்பவர்களும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் விகிதம் கடந்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பையும் விட அதிகமாகி 11% ஆக உள்ளது.

-தி இந்து பிசினஸ்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x