

புதுடெல்லி
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மீதான வரியை இந்திய அரசு குறைக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்தோனேசியா இந்தியாவிலிருந்து இறக்குமதி ஆகும் சர்க்கரை மீதான கட்டுப் பாடுகளைத் தளர்த்துவதாக அறி வித்துள்ளது.
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பொருளாதார அமைச்சர் கள் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அறிவிப்பை வெளி யிட்டார்.
ஆசிய நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின்படி பொருட் கள் மீதான இறக்குமதி வரி நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, பாமாயில் இறக்குமதிக்கு 50 சதவீத வரியை இந்தியா விதித்து இருந்தது. மலேசியாவுக்கு அந்த வரி விகிதம் தளர்த்தப்பட்டு 45 சதவீதமாக குறைக்கப்பட்டது.
தங்கம் இறக்குமதியில் சலுகை
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமா யிலுக்கு 50 சதவீதம் என்ற நிலையே தொடர்ந்தது. தற்போது இந்தோனேசிய பாமாயிலுக்கும் இறக்குமதி வரியை 45 சதவீத மாகக் குறைப்பதாக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் தங்கம் இறக்குமதி தொடர்பாக விதிக்கப் பட்டு இருந்த கட்டுப்பாட்டை இந்தியா தளர்த்தி உள்ளது.
இதையடுத்து இந்தோனேசியா-இந்தியா இடையிலான பரஸ்பர வர்த்தக உறவுக்காக இந்தோ னேசியாவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரைக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது. இதனால் இந்தியா, இந் தோனேசியாவுக்கு தடை ஏதுமின்றி சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்தோனேசியா, இந்தியா வுக்கு பாமாயில், ரப்பர், செப்புத் தாது, நிலக்கரி போன்றவற்றை ஏற்றுமதி செய்துவருகிறது. இந்தோனேசியா, கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கு 13.7 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 5 பில்லியன் டாலர் அளவில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
பாமாயில் ஏற்றுமதி
2018-ம் ஆண்டில் இந்தோனேசியா இந்தியாவுக்கு 5.37 பில்லியன் டாலர் மதிப்பில் நிலக்கரியையும், 3.56 பில்லியன் டாலர் மதிப்பில் பாமாயிலையும், 429.2 மில்லியன் டாலர் அளவில் ரப்பரையும், 414.9 மில்லியன் டாலர் அளவில் செப்புத் தாதுகளையும் ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது பாமாயில் மீதான வரியை இந்தியா குறைத்துள்ளதால், இந்தோனேசியாவின் பாமாயில் ஏற்றுமதி மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.