

புதுடெல்லி
ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, வங்கிகள் பொது அளவுகோலின் அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்தால், அது வங்கி களை பாதிக்கும் என்று பொருளா தார ஆய்வு நிறுவனமான மூடி’ஸ் எச்சரித்துள்ளது.
வங்கிகள் வட்டி விகிதத்தை பொது அளவுகோலின் அடிப்படை யில் நிர்ணயிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந் தது. அதன்படி, அக்டோபர் 1-க்குப் பிறகு வழங்கப்படும் குறிப்பிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் பொது அளவுகோலின் அடிப்படை யில் இருக்க வேண்டும் என்று கூறப் பட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி யின் உத்தரவு, வங்கிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூடி’ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது.
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை அவ்வப்போது குறைப் பது வழக்கம். இந்த ஆண்டில் மட்டும் 110 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வங்கிகள் வாடிக்கையா ளர்களுக்கு கடன் அளிக்கையில் இந்தக் குறைக்கப்பட்ட வட்டி விகி தத்தின்படி அளிப்பதில்லை. இந் நிலையில் வங்கிகள் வாகனக் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன், சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் என அனைத்திலும் பொது அளவு வட்டி விகிதத்தை பின்பற்ற வேண்டும் என்று ஆர்பிஐ கூறியது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் அதன் நிதி அளவுகளின் அடிப்படையி லேயே வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும். அந்த முறையே வங்கி களுக்கு ஏற்றது. இந்தப் புதிய உத்தரவால் வங்கிகள் தடுமாற் றத்தை சந்திக்கும் என்று மூடி’ஸ் கூறியுள்ளது.