

முகேஷ் அம்பானி கடந்த ஏழு வருடங்களாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட அவரின் சம்பளம் 205 மடங்கு அதிகம்.
ஐடிசி நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி.தேவேஷ்வரின் சம்பளம், அந்த நிறுவன பணியாளர்களின் சராசரி சம்பளத்தை விட 439 மடங்கு அதிகமாகும். விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜியின் சம்பளம் 89 மடங்காகவும், ஹெச்டிஎப்சியின் தலைவர் தீபக் பரேக்கின் சம்பளம் 19 மடங்காகவும், ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பூரியின் சம்பளம் 117 மடங்காகவும், ஐசிஐசிஐ வங்கியின் சி.இ.ஓ சாந்தா கொச்சாரின் சம்பளம் 97 மடங்காகவும், ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஷிகா ஷர்மாவின் சம்பளம் 74 மடங்காகவும் இருக்கிறது.
ஐடி துறை நிறுவனமான இன்போசிஸ் சி.இ.ஓ விஷால் சிக்காவின் சம்பளம், அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் சராசரி சம்பளத்தை விட 116 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஹெச்யூஎல் நிறுவனத்தின் சி.இ.ஓ சஞ்ஜீவ் மேத்தாவின் சம்பளம் 93 மடங்காகவும் இருக்கிறது.
நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி களின் சம்பளம் உயர்வு, பணி யாளரின் சராசரி சம்பளம் உயர்வு ஆகிய தகவல்களும் புதிய கம்பெனி சட்டத்தின்படி வெளியிடப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை நிறுவனங் களில் தலைமையில் இருப்பவர் களின் சம்பளத்துக்கும், பணியா ளர்களின் சராசரி சம்பளத்துக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.
ஆனால் சில நிறுவனங்களின் தலைமைப் பணியில் இருப்பவர் களுக்கு உயர்த்தப்படும் சம்பள விகிதமும் மற்ற பணியாளர் களுக்கு உயர்த்தப்படும் சம்பள விகிதமும் இணையாகவோ அதை விட குறைவாகவோ இருக்கிறது.
உதாரணத்துக்கு ரிலை யன்ஸ் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் 2014-15ம் நிதி ஆண்டில் பணியா ளர்களின் சராசரி சம்பளம் 3.71 சதவீதம் உயர்ந்து 7.29 லட்சமாக இருக்கிறது. ஆனால் முக்கிய நிர்வாகிகளின் சம்பளம் 1.93% குறைந்திருக்கிறது.