செய்திப்பிரிவு

Published : 10 Sep 2019 17:08 pm

Updated : : 10 Sep 2019 17:08 pm

 

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: காஷ்மீரில் நேரடியாக ஆப்பிள் கொள்முதல்; மத்திய அரசு முடிவு

jk-farmers


ஸ்ரீநகர்
காஷ்மீரில் ஆப்பிள் வர்த்தகர்களை தீவிரவாதிகள் மிரட்டி வருவதால் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
காஷ்மீரில் ஆப்பிள் வர்த்தகம் செய்பவர்கள் மீது தீவிரவாதிகள் கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து
இதையடுத்து தினந்தோறும் 750 டன்கள் ஆப்பிள்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அறிவித்தார்.
இதையடுத்து காஷ்மீர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ஆப்பிள்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்காக தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு நிறுவனமே நேரடியாக ஆப்பிள்களை வாங்கவும், அதற்குரிய பணத்தை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

தீவிரவாதிகள்மத்திய அரசுJK farmers
Popular Articles

You May Like

More From This Category

More From this Author