செய்திப்பிரிவு

Published : 10 Sep 2019 08:52 am

Updated : : 10 Sep 2019 08:52 am

 

பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனத்துக்கு தடை நீக்கம்: சத்யம் கம்ப்யூட்டர் வழக்கில் `செபி’ உத்தரவை ரத்து செய்தது தீர்ப்பாயம்

praise-water-house

 மும்பை

இந்திய நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கு பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) நிறுவனத்துக்கு பங்கு பரிவர்த் தனை வாரியம் (செபி) இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத் தின் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து நிறுவன இயக்குநர்களுக்கு சாத கமாக தணிக்கை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தியது. இதன் காரணமாக இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைத் தணிக்கை செய்வதற்கு 2018-ம் ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிடபிள்யூசி நிறு வனத்துக்கு செபி தடை விதித்தது.

இதை எதிர்த்து பங்கு பரிவர்த் தனை மேல் முறையீட்டு ஆணை யத்தில் (எஸ்ஏடி) பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனம் முறையீடு செய் தது. இதை விசாரித்த தீர்ப்பா யம் நேற்று இந் நிறுவனத்தின் மீது செபி விதித்த தடை செல்லாது என்று தெரிவித்தது.

இது பிடபிள்யூசி நிறுவனத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். அதேசமயம் கட்டுப்பாட்டு அமைப்பான செபி-க்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

பிடபிள்யூசி நிறுவனம் மேற்கொண்ட தணிக்கை முறை மற்றும் அதன் மதிப்பீடை ஆராயும் அதிகாரம் செபி-க்கு கிடையாது என்று எஸ்ஏடி அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகைய உத்தரவால் இதற்கு முன்பு செபி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் இனி கேள்விக்குறியாகும் அபாயம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த தீர்ப்பை எதிர்த்து செபி மேல் முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செபி அமைப்பானது நிகழ்ந்த தவறுக்கு மாற்று வழிகளையும், அத்தகைய தவறு நிகழாமல் தடுக்கும் வழிகளையும்தான் அளிக்க வேண்டும். மாறாக தடை விதிப்பது மாற்று வழியாகவோ அல்லது பிரச்சினைக்கு தீர்வாகவோ இல்லை என்று தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

பிரைஸ் வாட்டர் ஹவுஸ்சத்யம் கம்ப்யூட்டர் வழக்கு
Popular Articles

You May Like

More From This Category

More From this Author