Published : 09 Sep 2019 12:35 PM
Last Updated : 09 Sep 2019 12:35 PM

வாகன விற்பனை ஆகஸ்ட்டில் 23.55% சரிவு: 19 ஆண்டுகளில் கடும் வீ்ழ்ச்சி


மும்பை

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு வாகன விற்பனை கடந்த மாதம் 23.55 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது கடந்த 19 ஆண்டுகளில் அதிகபட்ச மாதாந்திர சரிவாகும்.

இந்தியாவில் வாகன விற்பனை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், விற்பனையகங்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகிய தரப்பில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல் என்று கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவது, அதனால் வாகனங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது குறைந்திருப்பது, வாகனக் காப்பீட்டுக்கான தொகைகள் உயர்ந்திருப்பது, கார்கள், மோட்டார் வண்டிகள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுவது ஆகியவை மோட்டார் வாகனத் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாக கூறப்படுகின்றன.

கூடவே, கனரக வாகன விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவு, சரக்குப் போக்குவரத்தோடும் மக்களின் நுகர்வோடும் இணைத்துப் பார்க்கப்படுகிறது.வாகன விற்பனையின் எண்ணிக்கை வீழ்ச்சியானது ஒட்டுமொத்த பொருளாதார சுணக்கத்துக்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்திய ஆட்டோமொபைல் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
‘‘இந்தியாவில் வாகனங்களின் மொத்த விற்பனை தொடர்ந்து 9-வது மாசமாக சரிவடைந்த வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 1,96,524 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

அதேசமயம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2,87,198 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 31.57 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்ட்டுள்ளது. இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.

ஜூலை மாதத்தில் 2,382,436 வாகனங்கள் விற்பனையான நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 1,821,490 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஒரு மாதத்தில் 23.55 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.

கார் விற்பனையை பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாதத்தில் 41.09 சதவீதம் சரிவடைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை 22.33 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் விற்பனை 38.71 சதவீதம் சரிவடைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x