செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 09:47 am

Updated : : 09 Sep 2019 09:47 am

 

இந்தியர்களின் சுவிஸ் வங்கி விவரங்கள், கணக்கில் வராத சொத்துகள் மீது விரைவில் விசாரணை

swiss-bank-details

புதுடெல்லி

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்த இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையில் கணக்கில் காட்டாத சொத்துகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்து இருந்தவர்களின் பரிவர்த்தனை செயல்பாடுகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. இந்நிலையில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கணக்கில் வராத சொத்துகளை கொண்டிருந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

வருமான வரியில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியர்கள் தங்கள் சொத்துகளை சுவிட்சர் லாந்து வங்கிகளில் பதுக்குகின்ற னர். இதனால் கருப்பு பணம் அதிகரித்துவந்தது. அது அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்தது. இவ்வகையில் முறைகேடாக சொத்துகளை பதுக்குவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சி களை எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக் கும் நபர்களின் விவரங்களைப் பகிர வேண்டும் என்று இந்திய அரசு சுவிட்சர்லாந்து அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் இம்மாதத் தின் தொடக்கத்தில் சுவிட்சர் லாந்து அரசு, அங்குள்ள வங்கி களில் 2018-ம் ஆண்டில் கணக்கு வைத்து இருந்தவர்களின் விவரங் களை இந்திய அரசுக்கு அளித் துள்ளது. இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியா வுடன் பகிர்வதற்காக தானியங்கி தகவல் பரிமாற்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் வைப்பு நிதி, கடன் பத்திரங் களில் செய்யப்பட்ட முதலீடு உட்பட வங்கிக் கணக்குப் பரிவர்த் தனை தொடர்புடைய அனைத்து விதமான தகவல்களையும் இந்திய அரசுக்கு சுவிஸ் வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிக் கணக்குகளை மூடி இருந்தாலும், ஒரு நாள் மட்டுமே கணக்கு வைத்து இருந்தாலும் அந்த தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களில் பெரும் பாலோனோர் தொழில் அதிபர்கள். அவர்களில் பலர் இந்தியாவுக்கு வெளியே குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் வாகன உற்பத்தி, ஜவுளித் துறை, ரியல் எஸ்டேட், இரும்பு தயாரிப்பு, வைர நகை வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


இந்த தகவல்கள் மூன்று பிரிவு களின் அடிப்படையில் வழங்கப் படும். கணக்கு வைத்திருக்கும் நபரை பற்றிய தகவல்கள்; அதாவது அவருடைய பெயர், முகவரி போன்ற விவரங்கள் அதில் இருக்கும். அடுத்ததாக அவருடைய வங்கிக் கணக்கு சார்ந்த விவரங்கள். அடுத்து அதன் நிதி விவரங்கள். குறிப்பாக வைப்பு நிதி, வட்டி வருவாய், காப்பீட்டு திட்டங்கள் போன்ற விவரங்கள் அளிக்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் விவரங்கள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கி விவரங்கள்கணக்கில் வராத சொத்துகள்Swiss bank details
Popular Articles

You May Like

More From This Category

More From this Author