

புதுடெல்லி
மின்சார விநியோக நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் நஷ்டத்தை சரி செய்வதற்காக, புதிய மின் கட்டணக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட உள்ளது என்று மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
மின் விநியோக நிறுவனங்கள், மின் தயாரிப்பு நிறுவனங்களிட மிருந்து மின்சாரத்தை வாங்கி விநி யோகம் செய்கின்றன. விநி யோகத்தில் ஏற்படும் நஷ்டத்தி னால், மின் தயாரிப்பு நிறுவனங் களிடமிருந்து பெறும் மின்சாரத் துக்கான தொகையை முறையான காலத்தில் அளிக்க முடியவில்லை. இது கடனாக மாறிவிடுகிறது.
இவ்வாறாக, மின் விநி யோக நிறுவனங்கள், மின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ.73,425 கோடி நிலுவையில் உள்ளது. இதில் ரூ.55,276 கோடி காலக் கெடு முடிந்தும் திருப்பி செலுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் மின் விநியோக நிறுவனங்களின் இழப்பை சரி செய்யும் வகையில் புதிய மின் கட்டணக் கொள்கை மற்றும் உதய் 2.0-ம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித் தார்.
மின் விநியோக நிறுவனங்கள் சந்திக்கும் இவ்வகையான இடர்ப்பாடுகளை களைவதற்காக மத்திய அரசு ஏற்கெனவே சில திட்டங்களை அறிவித்தது.
இந்நிலையில், அதன் இழப்பை சரிசெய்யும் வகையில் புதிய மின் கட்டணக் கொள்கை மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதய் 2.0 திட்டம் இந்த நிதி ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.