Published : 09 Sep 2019 09:43 am

Updated : 09 Sep 2019 09:43 am

 

Published : 09 Sep 2019 09:43 AM
Last Updated : 09 Sep 2019 09:43 AM

என்எஸ்இ மோசடிகளில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு: விசாரணை நடத்த தொழிலதிபர் ஜிக்னேஷ் ஷா கோரிக்கை

chidambaram-involved-in-nse-case

புதுடெல்லி

தேசிய பங்குச் சந்தை (எஸ்எஸ்இ) ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மையத்தை அமைப்பதில் மோசடி செய்திருப்பதாகவும், அதில் முன் னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத் துக்கு பங்கு இருப்பதாகவும் தொழி லதிபர் ஜிக்னேஷ் ஷா குற்றம் சாட்டியுள்ளார். எனவே எஸ்எஸ்இ விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பங்குச் சந்தை குறிப்பிட்ட சில புரோக்கர்களுக்கு வாய்ப் பளித்து பல ஆயிரம் கோடிகளில் ஆதாயம் அடையும் வகையில் பங்குச் சந்தை வர்த்தக விவரங் களை உடனடியாகப் பெறும் வகை யிலான ஒருங்கிணைந்த தகவல் மையத்தை அமைத்து கொடுத் துள்ளதாக ஜிக்னேஷ் ஷா கூறி யுள்ளார். இதனால் சில வர்த்த கர்கள் விநாடிகளில் பல ஆயிரம் கோடி முறைகேடாக லாபம் அடைந் துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக செபியும் விசாரணை நடவடிக்கையை எடுத்துள்ளது. சில அதிகாரிகள் பதவியிலிருந்து விலகும் நிலையும் ஏற்பட்டது.

ஜிக்னேஷ் ஷா பங்குச் சந்தை யில் பல ஆண்டு அனுபவம் கொண் டவர். இவர் ஆறு கண்டங்களில் 14-க்கும் மேற்பட்ட பங்குச் சந்தை களைத் தொடங்கி நடத்தி வந்துள் ளார். எம்சிஎக்ஸ் என்ற பிரபல கமாடிட்டி வர்த்தகச் சந்தையும் இவருடையதுதான். ஆனால், இவர் பல முதலீட்டாளர்களிடம் முதலீடு களைப் பெற்று அவற்றைத் திருப் பித் தராமல் ஏமாற்றி ரூ.5,600 கோடி அளவில் மோசடி செய்த தாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணை நடந்துவருகிறது. விசார ணையில் இதுவரை இவரோ இவருடைய நிறுவனமோ யாருக் கும் எந்த ஒரு பைசாவும் தராமல் ஏமாற்றியதாக எந்த புலனாய்வு அமைப்புகளும் கண்டறியவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.

பங்குச் சந்தை வர்த்தகத்தில் என்எஸ்இக்கு நேரடி போட்டி யாளராக எம்சிஎக்ஸ் இருந்ததால் அதிகாரத்தைப் பயன்படுத்தி பழி சுமத்தி நிறுவனத்தை அழிக்க தன்னை குற்றவாளியாக்கினர் என்று அவர் கூறியுள்ளார். தற்போது சட்டம் தனக்கான நீதியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதாகவும், தான் லண்டனுக்கு தப்பி ஓடிவிடவில்லை என்றும் அவர் கூறினார்.

என்எஸ்இ ப.சிதம்பரத்துக்கு மிகவும் வேண்டப்பட்டதாக இருக்க லாம் என்று தான் கருதுவதாகவும், தன்னை பங்குச் சந்தை தொழிலி லிருந்து விரட்டி அடிக்கவே சதித் தீட்டம் தீட்டி என் மீது மோசடி வழக்கை அரங்கேற்றினர் எனவும் அவர் கூறியுள்ளார். நேஷனல் ஸ்பாட் எக்சேஞ்ச் லிமிட்டெட் நிறு வனத்தில் நடந்த பண மோசடி களில் பணத்தை திருப்பி தராத தரகர்களை அடையாளம் காட்டியது நாங்கள்தான். அவர் களும் பணத்தைத் தருவதாக செபி முன்னிலையில் ஒப்புக் கொண்டனர். ஆனால், கடைசியில் நிதி அமைச்சகம் தலையிட்டு மொத்த நடவடிக்கையையும் பாழாக்கியது. மொத்த பழியையும் என் மீது சுமத்தி என்னை துரத்தி அடிக்க திட்டமிட்டது. இதில் அப் போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத் துக்கும் பங்கு இருக்கிறது.

ப.சிதம்பரம் போன்றவர்கள் சுய ஆதாயத்துக்காக இதுபோன்ற சதி வேலைகளைச் செய்யாமல் இருந்திருந்தால், இந்தியா உலகப் பங்குச் சந்தைகளுக்கெல்லாம் முன்னோடியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். உலகப் பங்குச் சந்தைக்கு வழிகாட்டியாக செயல்படும் தகுதி இந்தியாவுக்கு இருந்தது என்றார்.இன்று உலகின் முன்னணி பங்குச் சந்தை என்ற இடத்தை இந்தியா இழந்துவிட்டது. இழந்த இடத்தை இனி ஒருபோதும் அடைய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே என்எஸ்இ விவகாரத்தில் நடந்த மோசடிகளில் ப.சிதம்பரத்துக்கு அதிகபட்ச பங்கு இருப்பதாகவும், என்எஸ்இ நிறுவனத்தின் உரிமை மற்றும் அதன் வர்த்தகம் இரண்டிலும் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் இரண்டு அதிகாரிகள் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் பதிவு செய்துள்ளார். ஆனால், இவருடைய அனைத்து குற்றச்சாட்டுகளையும் என்எஸ்இ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


என்எஸ்இ மோசடிப.சிதம்பரம்தொழிலதிபர் ஜிக்னேஷ் ஷாதேசிய பங்குச் சந்தை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author