Published : 08 Sep 2019 09:24 AM
Last Updated : 08 Sep 2019 09:24 AM

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.99 லட்சம் கோடி முதலீடு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

புதுடெல்லி

நாட்டின் உள்கட்டமைப்பை மேம் படுத்த அடுத்த ஐந்து ஆண்டு களில் ரூ.99 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டது. இந்நிலையில் அதற் கான திட்டங்களை உருவாக்கு வதற்கான பணிக்குழுவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அமைத்தார்.

2025-க்குள் இந்தியாவை 5 டிரில் லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு நாட்டின் உள்கட்டமைப்பை மேம் படுத்துவது அவசியம் என்று கூறப் பட்டது. அதைத் தொடர்ந்து, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.99 லட்சம் கோடி அளவில் முதலீடு செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டது. இந்நிலையில் அதற் கான பணிக்குழு நேற்று அமைக்கப் பட்டுள்ளது. வெவ்வேறு அமைச் சகத்தின் செயலாளர்களும், நிதி ஆயோக்கின் தலைமை நிர் வாக அதிகாரி உட்பட அரசு உயர் அதிகாரிகளும் இந்தப் பணிக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பர். பொருளாதார விவகாரங் கள் துறையின் செயலாளர் ராஜீவ் குமார் இந்தக் குழுவுக்கு தலைமை வகிப்பார்.

பணிக் குழுவின் செயல்பாடுகள்

இந்தக் குழு உள்கட்டமைப்பு கான திட்டங்களை அரசுக்கு பரிந் துரை செய்யும். அதன்படி, பொரு ளாதார அளவிலும், தொழில்நுட்ப அளவிலும் சாத்தியப்படக்கூடிய திட்டங்களை இந்த குழு ஆராயும். முதற்கட்டமாக இந்த நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை பட்டியலிட உள்ளது. அதற்கான அறிக்கை அக்டோபர் மாதம் இறுதியில் சமர்ப்பிக்கப் படும். அதன் பிறகு அது சார்ந்த பணிகள் தொடங்கப்படும். 2021 முதல் 2025 வரைக்கான திட்டங்கள் குறித்த அறிக்கை இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்ச கம் கூறியபோது,

‘ஒவ்வொரு ஆண்டும் செயல் படுத்தப்பட வேண்டிய திட்டங்களை உருவாக்குவது சவால் நிறைந் தது. அதன்படி 2025 வரை மேற் கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்த பட்டியல் உரு வாக்கப்படும். தேவையான திட்டங் களை கண்டறிவதும் அவற்றை செயல்படுத்துவதும் அவசியம். இதற்காகத்தான் இந்த பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்துக்குள், ஒதுக்கப்பட்ட நிதிக்குள் திட்டங்கள் முடிக்கப் படுகிறதா என்பதை ஒவ்வொரு அமைச்சகமும் கண்காணிக்கும்’ என்று தெரிவித்தது.

2008 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் ரூ.70 லட்சம் கோடி அளவில் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக முதலீடு செய்யப் பட்டுள்ளது. தற்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே ரூ.99 லட்சம் கோடி அளவில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக முதலீடு செய்யப்பட உள்ளது.

சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லையென்றால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச் சியை மேம்படுத்துவது அவசிய மான ஒன்று. பொருளாதார வளர்ச் சிக்காக மட்டுமல்ல, சமூக மாற்றத்துக்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சி இன்றியமையாதது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்குழு, ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஆகக்கூடிய செலவு, திட்டத்தை முடிக்க வேண் டிய கால அளவு, திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வழி முறைகள் போன்றவற்றையும் ஆராயும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x