

குறுகிய காலத்தில் ஆதாயம் பார்க்கும் வெளிநாட்டு நிறுவனங் களைக் கட்டுப்படுத்துவதற்காக மிக முக்கியமான வங்கி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த முதலீட்டுக் கொள்கையில் இவ்விரு துறை களுக்குமான வரம்பு உயர்த்தப்பட வில்லை. அதிக லாபத்தை எதிர் நோக்கி முதலீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மோசடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்து வதற்காக வரம்பு உயர்த்தப்பட வில்லை என்று அவர் மேலும் கூறினார்.
ஒருங்கிணைந்த முதலீட்டுக் கொள்கையின்படி வங்கித் துறையில் தற்போது உள்ள 49 சதவீத வெளிநாட்டு முதலீட்டுக்குப் பதிலாக அதிகபட்சமாக 74 சதவீதம் வரை முதலீடுகளை அனுமதிக் கலாம் என்ற குழப்பமான நிலை அமைச்சரின் விரிவான விளக்கம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி வங்கிகளில் வெளி நாட்டு நிறுவன முதலீடு வழக்கம் போல 49 சதவீத அளவுக்கே அனுமதிக்கப்படும்.
இதேபோல பாதுகாப்புத் துறை யில் ஏற்கெனவே உள்ள 24 சதவீத அளவுக்கே வெளிநாட்டு நிறுவன முதலீடு அனுமதிக்கப்படும். ஆனால் அதேசமயம் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) ஒவ்வொரு துறைக்கேற்ப 100 சதவீதம் வரை அனுமதிக்கப்படும்.
ஒருங்கிணைந்த வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையை அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ), அந்நிய நிறுவன முதலீடு (எப்ஐஐ), வெளிநாடு வாழ் இந்தியர் முதலீடு ஆகியவை அனைத் துக்கும் பொதுவான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். -