என்பிஎஃப்சிகளுக்கு கடும் நெருக்கடி: கடன் பத்திரங்கள் முதிர்வு தொகை ரூ. 35 ஆயிரம் கோடி அளிப்பதில் சிக்கல்

என்பிஎஃப்சிகளுக்கு கடும் நெருக்கடி: கடன் பத்திரங்கள் முதிர்வு தொகை ரூ. 35 ஆயிரம் கோடி அளிப்பதில் சிக்கல்
Updated on
1 min read

மும்பை

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. கட்டு மானத் துறைக்கு நிதி அளிக் கும் ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவ னம் கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளப் பட்ட பிறகு என்பிஎஃப்சிகளுக்கான பணப் புழக்கம் பெருமளவு பாதிக்கப்பட்டது.

ஏற்கெனவே சிக்கலில் உள்ள என்பிஎஃப்சி-க்களுக்கு தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ஆம், செப்டம்பர் மாதத்தில் பெரும்பாலான கடன் பத்திரங்கள் முதிர்வடைகின்றன. இதற்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பரஸ்பர நிதி மற்றும் நிதிச் சேவை யில் ஈடுபட்டுள்ள டிஹெச்எஃப்எல் நிறுவனம் மட்டுமே ரூ.4,117 கோடி தொகையை திரும்ப அளிக்க வேண்டியிருக்கும். நிறுவன சீர மமைப்பு திட்டத்தை உறுதி செய்யும் வரை எந்த முதிர்வு தொகையையும் வழங்கப்போவதில்லை என்று டிஹெச்எஃப்எல் நிறுவனம் அறி வித்துவிட்டது.

இதேபோல எடெல்வைஸ், ஆனந்த் ரதி மற்றும் ஐஐஎஃப்எல் குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டிய முதிர்வு தொகை ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி வரை இருக்கும் என்று தெரிகிறது.

பொதுவாகவே செப்டம்பர் மாதத்தில் கடன் பத்திர முதிர்வு கள் அதிகமாக இருக்கும். இருந் தாலும் அதற்கு ஏற்ற அளவு தொகையை பிற நிறுவனங்கள் அளிக்கும். அல்லது புதிய முத லீட்டாளர்கள் கிடைப்பர் என்று ஜேஎம் பைனான்சியல் நிறுவன நிர் வாக இயக்குநர் அஜய் மங்லுனியா தெரிவித்தார்.

ஆனால் சந்தையின் போக்கு என்பிஎஃப்சி-களுக்கு சாதகமாக இல்லாத சூழலில் மறு கடன் அல்லது புதிய முத லீட்டாளர் கள் கிடைப்பது கடினம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்ற னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in