பிரிக்ஸ் வங்கியுடன் எக்ஸிம் வங்கி ஒப்பந்தம்

பிரிக்ஸ் வங்கியுடன் எக்ஸிம் வங்கி ஒப்பந்தம்
Updated on
1 min read

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக உருவாக்கியுள்ள புதிய மேம்பாட்டு வங்கியுடன் (என்டிபி) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து புதிய மேம்பாட்டு வங்கியைத் தொடங்குகின்றன. இந்த வங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செயல்படும் என வங்கியின் தலைவர் கே.வி. காமத் அறிவித்துள்ளார். சீனாவின் ஷாங்காய் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த வங்கி செயல்பட உள்ளது.

இந்நிலையில் ஒப்பந்தத்தில் எக்ஸிம் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யதுவேந்திர மாதுர் கையெழுத்திட்டுள்ளார்.

ரஷியாவின் யுஃபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ஒரு நிகழ்வாக இந்த ஒப்பந்தமும் கையெழுத்தானதாக எக்ஸிம் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிரேசிலியன் மேம்பாட்டு வங்கியுடன் (பிஎன்டிஇஎஸ்) ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி வங்கி அனுபவத்தை பகிர்ந்து கொள்வது, சிறப்பான நடை முறையைப் பின்பற்றுவதற்கான வழிவகைகளை அளிப்பது, வங்கியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்களை அளிப்பது, ஸ்திரமான நிதி வழங்கும் தீர்வுகளை சொல்லித் தருவது உள்ளிட்டவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in