Published : 20 Jul 2015 09:53 AM
Last Updated : 20 Jul 2015 09:53 AM

ரயில்வேயில் முதலீட்டை அதிகரித்தால் பொருளாதாரம் 3 சதவீதம் உயரும்

ரயில்வே துறையில் அதிக முதலீடு செய்து, வழித்தடங்களை விரிவு படுத்தினால் பொருளாதார வளர்ச்சி 2% முதல் 3% வரை உயரும் என்று ரயில் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது.

சீனாவை எடுத்துக்கொண்டால் அந்த நாடு ரயில் போக்குவரத்தில் அதிக முதலீடுகளை செய்தது. அதிக நகரங்களை இணைத்தது, இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.

இந்திய ரயில்போக்குவரத்து துறையில் நெருக்கடிதான் முக்கிய பிரச்சினையாகும். இரு வழிப்பாதை மற்றும் மூன்று வழிப்பாதை அமைக்க வேண்டும். அப்போதுதான் நெருக்கடி குறையும். இதற்கு அதிக முதலீடுகள் அவசியம்.

ஏலம் விடுவது அல்லது இதர வர்த்தக நடவடிக்கைகளில் ரயில்வே அமைச்சர் முடிவெடுப் பதில்லை. அதிகாரம் பகிர்ந் தளிக்கப்பட்டுள்ளது. அமைச்சகம் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்கிறது.

சமீபத்தில் 400 புதிய ரயில் நிலையங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ரயில்வே துறை முக்கிய பங்குவகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x