

புதுடெல்லி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இத் துறையின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் காணப் படும் தேக்க நிலையைப் போக்கு வதற்கு எத்தகைய உதவிகள் தேவை என்பது குறித்து பிரதி நிதிகளிடம் கேட்டறிந்தார்.
கடந்த மாதம் வங்கித் துறையைச் சேர்ந்தவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தி னார். அதன் பிறகே வங்கிகள் இணைப்பு மற்றும் பொருளா தாரத்தை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாயின.
இந்நிலையில் தற்போது பொரு ளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக் கும் கட்டுமானத் துறை வளர்ச்சிக் காக இத்துறை வல்லுநர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இத்துறை எதிர்கொண்டுள்ள பிரச் சினைகள், தேக்கநிலைக்கான காரணங்களை இத்துறை பிரதி நிதிகள் நிதி அமைச்சரிடம் தெரிவித்தனர்.
கடந்த சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திரமோடி, கட்டு மானத் துறையில் ரூ. 100 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். நவீன கட்டுமான வசதிகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் பொருளா தாரம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில் லியன் டாலர் பொருளாதாரமாக உயரும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத் துக்குப் பிறகு பேசிய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் தலைவர் என்.என்.சின்ஹா, கட்டுமான செலவு கள் கடந்த ஆண்டை விட தற்போது அதிகரித்துவிட்டதை சுட்டிக்காட்டி னார். இருப்பினும் அதை உணர்ந்து அதற்கேற்ப சாலைப் பணி திட்டங்களுக்கு ஒப்பந்தங் களை வழங்குவதாகக் குறிப்பிட் டார். இதுவரையில் 600 கி.மீ. தூரத்துக்கு சாலை கட்டுமான திட் டத்துக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இத்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட வேண் டும் என்று ஹெச்சிசி தலைவர் அஜித் குலாப்சந்த் தெரிவித்தார்.