ஐடிபிஐ வங்கிக்கு ரூ. 9,000 கோடி மறு மூலதன முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐடிபிஐ வங்கிக்கு ரூ. 9,000 கோடி மறு மூலதன முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி
நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐடிபிஐ வங்கிக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் மறுமூலதன முதலீடாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான ஐடிபிஐ வங்கி, வாராக் கடன்களின் அதிகரிப்பால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கிறது.
ஐடிபிஐ வங்கியில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), அந்த வங்கியின் பங்கில் 51% அளவுக்கு முதலீடு செய்யும் உத்தேசத் திட்டத்துக்கு, ஐஆர்டிஏஐ எனப்படும் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று, வளர்ச்சி ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.
ஐடிபிஐ வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் எல்ஐசி நிறுவனத்துக்கு 26 சதவீத பங்குகளை விற்பனை செய்து அதன் பங்கு அளவை 51 சதவீதமாக உயர்த்திக் கொள்ள அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி 33.98 கோடி சம பங்குகளை ரூ. 61.73 என்ற விலையில் விற்பதெனவும், முன்னுரிமை பங்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ஒரு பங்கு ரூ. 51.73 என்ற விலையில் ரூ. 2,098.19 கோடிக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.


இந்தநிலையில் ஐடிபிஐ வங்கிக்கு 9000 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மறு மூலதன முதலீடாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘இதன்படி ஐடிபிஐ வங்கிக்கு 4700 கோடி ரூபாய் ஒருமுறை மறு மூலதன முதலீடாக மத்திய அரசு வழங்குகிறது. அதேபோல் 4557 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எல்ஐசி நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in