

புதுடெல்லி
ஆட்டேமொபைல் துறை நெருக்கடியை தீர்ப்பதற்காக, வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க முடியாது கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன.
இதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. இந்த பொருளாதார சுணக்கத்தால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத்தில் 4,74,487 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள் ளது. முந்தையஆண்டு இதே காலத் தில் நிறுவனம் 6,17,990 கார்களை விற்பனை செய்துள்ளது. விற்பனை யில் 23 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. சிஎன்ஜி வாகனங்களைப் பொருத்த மட்டில் இந்நிறுவனம் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக னங்களை விற்பனை செய்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கவும், ஆலைகளுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகி வருகிறது. இதையடுத்து ஆட்டேமொபைல் துறைக்கு பல்வேறு சலுகைளை அளிக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதன் ஒருபகுதியாக வாகனங்கள் விற்பனைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது.
கேரளா எதிர்ப்பு
இதுகுறித்து கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘ஆட்டோமொபைல் துறை பாதிப்பை சரி செய்வதற்காக ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க இயலாது. இதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தால் கேரளா கடுமையாக எதிர்க்கும்.
ஜிஎஸ்டி வரியை குறைக்கும் எந்த முயற்சியையும் எங்களால் ஆதரிக்க முடியாது. வரி குறைப்பால் ஏற்படும் இழப்பை மத்திய அரசால் ஈடுகட்ட முடியும். ஆனால் எங்களால் இது முடியாது. இதற்கு பதிலாக ஆட்டேமொபைல் துறைக்கு பொருளாதார உதவிகள் வழங்கலாம். இதுபோன்ற முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து வாகனங்களை பொறுத்து ஜிஎஸ்டி வரி 5 முதல் 50 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.