

புதுடெல்லி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுகிறது.
முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளார்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்று அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது.
அந்த தொகையுடன், அதே அளவு தொகையை நிறுவனப் பங்களிப்பாக சேர்த்து, தொழிலாளர்களது பிஎப் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதிக்கு 2018- 2019 நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருக்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாகவே இபிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டே வந்தது. 2017- 2018-ம் நிதியாண்டில் 8.55 சதவீதத்தில் இருந்து 2018- 2019-ம் நிதியாண்டில் 8.65 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதற்கு நிதியமைச்சகமும், இபிஎப் அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதையடுத்த இதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.