Published : 30 Aug 2019 03:08 PM
Last Updated : 30 Aug 2019 03:08 PM

புழக்கத்தில் ரூ.2000 தாள்கள் குறைந்து ரூ.500 தாள்கள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் தகவல்

மும்பை,

2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகளின் புழக்க எண்ணிக்கை மார்ச் 2019 நிதியாண்டு முடிவில் குறைந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தகவலின்படி மார்ச் 2018 முடிவில் மொத்தம் 3,363 மில்லியன் நோட்டுக்கள் என்ற எண்ணிக்கையில் ரூ.2000 தாள்கள் புழக்கத்தில் இருந்தன. இது புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 3.3% ஆகும் அதாவது மொத்த அளவில். மதிப்பின் அடிப்படையில் மொத்தப் பணப்புழக்கத்தில் ரூ.2000 தாள்களின் புழக்க விகிதம் 37.3%.

இந்நிலையில் மார்ச் 2019 முடிவில் ரூ.2000 தாள்களின் புழக்க எண்ணிக்கை 3,291 மில்லியன் நோட்டுகளாகக் குறைந்துள்ளது. இது புழக்கத்தின் மொத்த அளவின் விகிதத்தில் 3% மதிப்பின் விகிதத்தில் 31.2% ஆகும்.

ஆனால் இதே வேளையில் இதே காலக்கட்டத்தில் ரூ.500 தாள்கள் 15,469 மில்லியனிலிருந்து 21,518 மில்லியன் தாள்களாக புழக்கத்தில் அதிகரித்துள்ளது.

ஆகவே புழக்கத்தில் இருக்கும் ரூ.500 தாள்களின் எண்ணிக்கை புழக்கத்தில் இருக்கும் மொத்த நோட்டுகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் ஆகும்.

ஆகவே, “மதிப்பு அளவுகோலின்படி புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த அளவில் ரூ.500, ரூ.2000 தாள்களின் எண்ணிக்கை சேர்ந்து மார்ச் 2018 முடிவில் மொத்த புழக்கத்தில் 80.2% ஆகும். இது மார்ச் 2019 முடிவில் 82.2% ஆக அதிகரித்துள்ளது.

ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை புழக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது, அதாவது 42.9%லிருந்து 51% ஆக அதிகரித்துள்ளது.

-சிறப்புச் செய்தியாளர் ( தி இந்து, ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x