

சென்னை
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் புதிய இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நேற்று சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிமா இஆர் மற்றும் என்ஒய்எக்ஸ் இஆர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ.68,721 மற்றும் ரூ.69,754 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட்டு அந்நிறுவனத்தின் சந்தைப் பிரிவின் தலைவர் மனு குமார் கூறியதாவது: ‘தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த இரு ஸ்கூட்டர் களை அறிமுகம் செய்கிறோம். இவற்றில் இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதனால் எவ்வித சிரமமும் இன்றி அதிக தொலைவு வரை பயணிக்க முடியும். இதன் லித்தியம் அயர்ன் பேட்டரி நான்கு மணி நேரத்தில் முழுவது சார்ஜ் ஆகிவிடும். ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட பிறகு நூறு கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்’ என்று தெரிவித்தார். அலுவலகம் செல்லுபவர்கள், கல்லூரி செல்பவர்கள் ஆகியோர் களுக்கானதாக ஆப்டிமா இஆர் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறு வியாபாரிகள், டெலிவரி பாய் ஆகி யோர்களுக்கானதாக என்ஒய்எக்ஸ் இஆர் வடிமைக்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரில் இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வரு கிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய வாகனங்களை தயாரிப் பதற்கான ஆய்வுகளில் முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள் ளது. ஆண்டுக்கு 5 லட்சம் வாக னங்களை உற்பத்தி செய்திடும் வகையில், அடுத்த மூன்று ஆண்டு களில் ரூ.700 கோடி அளவில் முதலீடு செய்ய உள்ளது. தென் இந்தியா வில் தனது சேவையை விஸ்தரிப் பதற்காக, பெங்களூரில் அதற்கான அலுவலகம் ஒன்றை திறந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்துக்கு 615 சேவைப் பிரிவுகள் உள்ளன.