Published : 30 Aug 2019 09:30 AM
Last Updated : 30 Aug 2019 09:30 AM

அந்நிய முதலீட்டு அனுமதி உத்தரவு எதிரொலி: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடி விற்பனையகத்தை திறக்கத் திட்டம்

புதுடெல்லி

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையகத்தை திறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள் ளது. இந்திய வாடிக்கையாளர் களுக்கு நேரடி சேவையை வழங்கு வதற்காக அதன் விற்பனைய கத்தை இந்தியாவில் திறக்க உள்ள தாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தி யாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடு படுவதற்கு பல்வேறு கட்டுப்பாடு கள் உள்ளன. நேற்று முன் தினம் (புதன்) டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவ காரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், அந்நிய நேரடி முதலீடு கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத் தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங் களின் நேரடி முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் நேரடி விற்பனையகத்தை திறப்பதற்கான அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தி யாவில் நேரடி சில்லறை வர்த்தகத் தில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளால் ஆப்பிள், ஒன்பிளஸ், ஓப்போ போன்ற மொபைல் போன் தயாரிப்பு நிறு வனங்கள் இந்தியாவில் தங்களது விற்பனையகத்தை அமைக்க முடி யாமல் இருந்தன. அதற்கு பதிலாக பிளிப்கார்ட், அமேசான் போன்ற இணைய வழி வர்த்தக நிறுவனங் கள் மூலமும், ஒப்பந்த விற்பனை கடைகள் மூலமும் தனது பிராண்ட் தயாரிப்புகளை விற்பனை செய்து வந்தன. இந்நிலையில் தற்போது ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்த கத்தில் அந்நிய முதலீடுகள் தொடர் பான கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டு இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங் களுக்கான நேரடி விற்பனைய கங்களை தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.

‘இந்திய வாடிக்கையாளர் களுக்கு எங்கள் நிறுவனத்தின் நேரடி சேவையை வழங்க ஆவலாக உள்ளோம். அதற்கான கட் டமைப்பை இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளோம்’ என்று ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறி விப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், பிற நாட்டு வாடிக்கையா ளர்களைப் போலவே இந்திய வாடிக்கையாளர்களும் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி சேவையை சிறந்த முறையில் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

‘மத்திய அரசு அந்நிய நேரடி முதலீடு மீதான கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது. இதனால் மொபைல் விற்பனை சந்தை வளர்ச்சி அடையும். உலகத் தரத்தில் மொபைல் தொடர்பான சேவைகள் இந்தியாவில் வழங்கப்படும்’ என்று மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கான இந்திய சங்கம் (ஐசிஇஏ) தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி சில்லறை விற்பனையகம் மும்பையில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு அந்நிய நேரடி முதலீடு மீதான கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது. இதனால் மொபைல் விற்பனை சந்தை வளர்ச்சி அடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x