

புதுடெல்லி
இந்தியாவின் வளர்ச்சி வீதம் நடப்பு நிதியாண்டில் 6.7 சதவீதமாக குறை யும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. தற்போது நிலவும் பொருளாதர மந்தநிலை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி தடைபடும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று அந் நிறுவனம் கூறியிருந்தது. இந்நிலை யில் அதை 6.7 சதவீதமாக குறைத் துள்ளது. இந்த சூழ்நிலையில் 2025-க்குள் இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறுவது கடினம் என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் மக்களின் நுகர்வு திறன் குறைந்தது ஆகியவை இந்தியா வின் வளர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகும். தற்போது ஆட்டோ மொபைல் துறை மிகக் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றது. இவை அனைத்தும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது ஆண் டாக இந்த வளர்ச்சி வீதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் சுனில் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் வளர்ச்சி 5.7 சதவீதமாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
திவால் சட்ட நடவடிக்கையில் ஏற்படும் காலதாமதம், எதிர்பாராத பருவநிலை மாற்றம் ஆகிய காரணிகளும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அவர் கூறினார்.
நாடுகளுக்கிடையேயான வர்த் தக உறவில் ஏற்பட்டுள்ள பாதிப் பினால் இந்தியாவின் ஏற்றுமதி வீதமும் குறையும் என்றும் கூறப் படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் முதலீடுகள் குறைந்துள் ளன. இதனால் போதிய பொருளா தார முன்னேற்றங்கள் உருவாக வில்லை. இதுபோன்ற பல்வேறு காரணிகளால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது.
அதனால் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப் படுள்ளது. வாகன உற்பத்தி துறை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் தற்போது கடும் பொருளாதர நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்கள் எதிர் கொண்டு வரும் நெருக்கடியை சரி செய்யும் பொருட்டு சில திட்டங்களை அறிவித்தார்.
அந்த திட்டங்களால் தற் போதுள்ள நிலைமையை சரி செய்யமுடியாது. அவை குறைந்த கால அளவில் பயனளிக்கக் கூடி யவை. மட்டுமல்லாமல் அந்த புதிய அறிவிப்புகளின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்கவும் முடியாது என்று அவர் கூறினார்.
பருவமழைக்கால தாமதத் தினால் வேளாண் துறை சார்ந்த வளர்ச்சி 2.1 சதவீதமாக குறையும் என்று தெரிகிறது. சென்ற ஆண்டில் அதன் வளர்ச்சி 2.9 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் வரி வருவாய் அரசு எதிர்பார்த்தை விடக் குறைவானதாக இருக்கும். அதேபோல், ரிசர்வ் வங்கி ரூ.1.76 கோடி அளவில் உபரிநிதியை அரசுக்கு வழங்க முடிவெடுத்து இருப்பதால், நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீத அளவில் இருப்பதற்கான சாத்தியங் கள் அதிக அளவில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் துறை, உற்பத்தி துறை ஆகியவை கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. மக்களின் முதலீடுகளும் குறைந் துள்ளன. வீட்டு உபயோக பொருட் களின் விற்பனை குறைந்துள்ளது. இவை எல்லாம இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை செலுத்தக் கூடிய காரணிகள் ஆகும். அவற்றில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நடப்பு நிதி ஆண்டில் ரூ.71.21 அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் தரச் சான்று நிறுவனமான மூடி’ஸ், நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.2 சதவீதமாகக் குறையும் என்று கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.