

புதுடெல்லி
ஏடிஎம் நிலையங்களில் நிகழும் பணப் பரிவர்த்தனை மோசடிகள் அதிகரித்துவருகிற நிலையில், ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கான கால அளவில் மாற்றங்கள் கொண்ட வருதற்கான திட்டத்தை டெல்லி யின் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (எஸ்எல்பிசி) கூட்டத் தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
18 வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட, கடந்த வாரம் நடை பெற்றக் கூட்டத்தில் இந்தத் திட்டம் குறித்து கலந்தாலோசிக்கப் பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஏடிஎம்களில் இரவு நேரங்களில் பரிவர்த்தனை செய்வதை குறைக்க புதிய திட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் ஏடிஎம்-ல் ஒரே நேரத்தில் தொடந்து இருமுறை பரிவர்த்தனை மேற் கொள்ள முடியாது. ஒரு முறை பரிவர்த்தனை செய்தபிறகு 6 மணி முதல் 12 மணி நேரம் கழித்த பிறகே அடுத்த பரிவர்த்தனை மேற் கொள்ளமுடியும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஏடிஎம் நிலையங் களில் பணத்திருட்டு அதிகரித்து வருகிறது. போலியான ஏடிஎம் அட்டைகள் தயார் செய்யப்பட்டு அதன் மூலம் மற்றவரின் கணக்கில் இருக்கும் பணம் திருடப்படுகிறது. இதுபோன்ற மோசடிச் செயல்களை தடுப்பதற்காக இந்த புதிய திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வகையான மோசடிச் செயல்பாடுகள் இரவு நேரங்களில் தான் அதிக அளவில் நிகழ்கின்றன. அதனை தடுக்கும் விதமாக அந்தக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ஏடிஎம்-களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாத அளவில் புதிய திட்டங்களை பரிசீலித்து வருகிறோம் என்று டெல்லி எஸ்எல்பிசி-யின் முதன்மை ஒருங்கி ணைப்பாளரான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து டெல்லியில்தான் அதிக அளவில் ஏடிஎம் மோசடி நடைபெறுகிறது. சென்ற ஆண்டில் மாகாராஷ்டிராவில் 233 ஏடிஎம் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், டெல்லியில் 173 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 980 ஏடிஎம் மோசடி வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இவ்வகையான ஏடிஎம் மையங்களில் மேற்கொள்ளப்படும் மோசடிகளை தடுக்கும் விதமாக வங்கிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றன.